Tuesday, 6 May 2014

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள்

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள்

ஆதி சங்கர பகவத்பாதாளால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி தக்ஷிணாம்னாய ஸ்ரீசாரதா பீடத்தை 34ஆவது ஜகத்குருவாக அலங்கரித்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிகள் கருணாமூர்த்தி. ஜீவன் முக்தர். சிருங்கேரி ஜகத்குருக்கள் அனைவருமே தர்மபோஷகர்களை, சாஸ்திர பண்டிதர்களை ஆதரிப்பதிலும், ஊக்கம் அளிப்பதிலும் ஸர்வ ஸ்ரேஷ்டர்கள்.

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி ஸ்ரீஸ்ரீஸ்ரீசந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிகள் எவ்வாறு வேத சாஸ்த்ர வித்வான்களைப் பாராட்டி, ஊக்கம் அளித்தார்கள் என்றும், அதே சமயத்தில் சிறு தவறு இருப்பின் உடனே கண்டிப்புடன் கலந்த நல்ல சரியான உபதேசம் அருளிய நிகழ்ச்சியையும் பற்றியது.

ஆச்சார்யாள் கருணைக்கடல்; தயாசாகரர், பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர்கள் என்பது பற்றிய நிகழ்ச்சியே இதன் இரண்டாவது பகுதி.

1. ஆச்சார்யாள் ஒரு முறை தென்னிந்திய விஜய யாத்திரையின் போது திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள கொட்டாரம் என்ற கிராமத்திற்கு வருகை புரிந்திருந்தார். அந்த ஊரில் ஸ்ரீஸ்வாமிநாத சாஸ்திரிகள் என்ற பெரும் தனவந்தர் இருந்தார். அவர் சம்ஸ்கிருத மஹாபண்டிதர். அதிலும் குறிப்பாக ஆகம சாஸ்திரத்தில் மஹா நிபுணர். சிறந்த ஓர் இசைக்கலைஞரும் ஆவார். ஆச்சார்யாள் அவரது இல்லத்திற்கு வருகை புரிந்திருந்தார். அப்பொழுது அந்த சாஸ்திரிகளை ஆச்சார்யாள் ஸ்ரீருக்மிணி கல்யாணத்தை ஸ்ரீஹரிகதா காலக்ஷேபம் நடையில் கூறுமாறு சொல்லவே, அந்த சாஸ்திரிகளும் ஆச்சார்யாள் முன்னிலையில் தொடர்ந்தார். ஹரிகதா காலக்ஷேபத்தின் இடையே ஓர் இடத்தில் “பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் ஆக்ஞையின்படி அவரது சாரதி (ரதம் ஓட்டுபவர்) தாருகன் நான்கு குதிரைகளையும் நன்கு இழுத்து, இறுகப் பிடித்து ரதத்தில்.... என்று சொல்லுமிடத்தில் அந்த நான்கு குதிரைகளின் பெயர்களைக் கூறும்பொழுது ‘சைபியா’, ‘பாலஹா’, என்ற குதிரைகளுடன் மற்ற இரண்டு குதிரைகளையும் சேர்த்து....” என்று சொன்னார். (அதாவது நாம் ஆங்கிலத்தில் மீtநீ, மீtநீ என்று சொல்வது போல) அந்தச் சமயத்தில் மற்ற இரண்டு குதிரைகளின் பெயர்கள் சாஸ்திரிகளின் ஞாபகத்திற்கு வரவில்லை. உடனே ஆச்சார்யாள் ‘சுக்ரீவா’, மேகபுஷ்பா’ என்று மற்ற இரண்டு குதிரைகளின் பெயர்களை எடுத்துக் கூறவே, சாஸ்திரிகள் ஸ்தம்பித்து விட்டார். அதுவரை சாஸ்திரிகளின் மஸிதில் “ஆச்சார்யாளுக்குப் பழைய புராண காவியங்களில் தீவிர நாட்டம் இருக்காது” என்ற தவறான எண்ணம் முற்றிலும் மறைந்தது. ஆச்சார்யாள் மேற்கொண்டு தொடரச் சொன்னதும், சாஸ்திரிகளும் ஹரிகதா காலக்ஷேபத்தைத் தொடர்ந்தார்.

அந்த நான்கு குதிரைகளும் வெகு வேகமாக ஓடக்கூடியன என்று கூறி, ஒவ்வொரு குதிரையின் வேகத்தை முறையே காற்றிற்கும், கருடனுக்கும், மனிதனின் மனத்திற்கும் ஒப்பிட்டுக் கூறி நாலாவதாக ஒப்பிடுவதற்காக “எவ்வாறு தற்காலத்தில் சந்த்யாவந்தனத்தை வேக வேகமாகச் செய்து முடிப்பார்களோ அது மாதிரி” என்று கூறி முடித்ததும், சபையிலுள்ள அனைவரும் கொல்லென்று சிரித்துவிட்டனர். சாஸ்திரிகளுக்கும் திருப்தியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. ஆனால் ஆச்சார்யாளின் வதனமோ கடுமையாக இருந்தது. ஆச்சார்யாள் அங்கு கூடியிருந்த சபா மக்களை நோக்கி, “சாஸ்திரி உங்களைக் கேலி செய்கிறார். இஃது கேட்டு தங்களால் எப்படி வாய்விட்டு சிரிக்க முடிந்தது? இந்த விஷயம் தலை குனிந்து வெட்கப்பட வேண்டியது” என்று கூறவே அதிர்ச்சியுடன் மௌனநிலையில் அப்படியே இருந்தார்கள். உடனே சாஸ்திரிகளை நோக்கி “சாஸ்திரிகளே! இந்த விஷயம் சிரிக்க வேண்டியதோ அல்லது சிரிக்கவைக்க வேண்டியதோ அன்று. உங்களுடைய முக்கிய உத்தேசம் சந்த்யாவந்தனத்தை கிரமப்படி செய்ய வேண்டியதைத் தூண்ட வேண்டுமே தவிர வேறு எதுவும் கிடையாது” என்று கூறிய போது ஆச்சார்யாளின் கண்டிப்பு கலந்த த்வனியுடன் சரியான உபதேசமும் (அறிவுரையும்)தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

2. “ஆச்சார்யாள் தங்களின் நித்ய ஜபம், அனுஷ்டானம், வேதாந்த விசாரம், பூஜா புனஸ்காரம் செய்வதற்கே நேரம் போதாமல் இருக்கையில், எப்படித்தான் தங்களை நாடி வரும் பக்தர்களின் கஷ்டங்களைத் (நோய்) தீர்க்க மந்த்ர சாஸ்திரத்திலிருந்து உடனுக்குடன் நிவாரணம் பெற பரிகாரம் கூறுவதற்கு நேரம் கிடைக்கிறதோ என்றும் இஃது ஆச்சார்யாளுடைய நித்திய அனுஷ்டானத்திற்கு இடைஞ்சலாக இருக்காதா? ஆச்சார்யாளை இடைஞ்சல் செய்யாது, மருத்துவர்களை அணுகலாகாதா?” என்று ஒரு முறை திருநெல்வேலி அட்வகேட் ஸ்ரீஆர்.கிருஷ்ணஸ்வாமி அய்யர் (ஸ்ரீ ஞானானந்த பாரதி ஸ்வாமிகளின் பூர்வாச்ரமப் பெயர்) தம் மனஸில் நினைத்துக் கொண்டார். ஆனால் ஆச்சார்யாளிடம் வெளிப்படையாகக் கூறவில்லை. அடுத்த க்ஷணத்தில் ஆச்சார்யாள் அவரைப் பார்த்து “சாஸ்திரங்கள் ஒவ்வொரு வியாதிக்கும் நிவாரணம் பெற ஒரு குறிப்பட்ட புனிதமான கல்லை (ஜீக்ஷீமீநீவீஷீus ஷிtஷீஸீமீ) அணிந்து கொள்ளவும், அடுத்ததாக ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை வியாதிக்கேற்றவாறு மீண்டும் மீண்டும் ஜபம் செய்யவும், மூன்றாவதாக ஒரு குறிப்பிட்ட ஔஷதம் மூலிகையை (பிமீக்ஷீதீணீறீ னீமீபீவீநீவீஸீமீ) உட்கொள்ளவும் கூறுகிறது. முதலாவதாகச் சொன்ன புனிதக்கற்கள் விலையுயர்ந்த கற்கள் தற்காலத்தில் தூய நிலையில் கிடைப்பது மிகவும் துர்லபம். மூன்றாவதாகச் சொன்ன ஔஷதம் மூலிகையானது பணத்தாசை பிடித்த வைத்தியர்களின் கைவசம் போய்விட்டது. இப்படிப்பட்ட ஸ்திதியில் என்னிடம் வரும் மக்களுக்கு நான் எப்படி முடியாது என்று கண்டிப்பாகக் கூறமுடியும்? பாபம் அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களைப் பீடித்துள்ள கஷ்டங்களை நீக்கினால் அன்றோ பக்தி, முக்தி, ஆத்ம விசாரம் போன்ற உயரிய சித்தாந்தங்களைப் பற்றிக் கேட்க, அறிய ஆவல் கொண்டவர்கள் என்னிடம் வரமுடியும்” என்று கூறி “ஆதிசங்கரர் எந்த ஓர் உயரிய சீரிய சித்தாந்தத்தைப் பரப்ப எண்ணி இந்த சம்ஸ்தானத்தை ஸ்தாபனம் செய்தாரோ அதை மறந்துவிட்டு என்னை ஒரு வைத்யனாகவும் மாந்த்ரீகனாகவும் அணுகுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.” என்று கூறியதை நாம் அறியும்போது ஆச்சார்யாளை - தயாசாகரத்தை - கருணைக் கடலை, குருவாக அடையப் பெற்றது நம் முன்னோர் செய்த புண்ணியபலனே என எண்ணத் தோன்றுகிறது.

சங்கர தேசிக விரசித பீடாதிப மாலிகா மஹாரத்னம் |
ப்ரணமாமி சந்த்ரசேகர பாரத்யபிதான தேசிகம் ஹ்ருதயே ||

என நம் ஆச்சார்யாள் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளால் இயற்றிய “ஸ்ரீசந்த்ரசேகர பாரதி நவரத்னமாலிகா”வை ஸ்மரணம் செய்து தியானிப்போமாக!

(இந்தக் கட்டுரை ஸ்ரீஞானானந்த பாரதி ஸ்வாமிகளின் SPARKS FROM A DIVINE ANVIL புத்தகத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.)

No comments:

Post a Comment