வேதமந்திரத்தின் தாய்
“செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேறுகின்றோம், அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!”
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!”
என்று காயத்ரீ மந்திரத்தைத் தமிழில் மொழிபெயர்த்துத் துதித்தார் மஹாகவி பாரதியார். காயத்ரீ தேவியின் மஹிமைதான் என்னே! யுகந்தோறும், காலந்தோறும் பற்பல முனிவர்களாலும், மன்னர்களாலும், இறையருளாளர்களாலும் உச்சரிக்கப்பட்டு பலப்பலப் பயன்களைத் தந்த, மந்திரங்களுக்கெல்லாம் மந்திரமாய்த் திகழும் காயத்ரீ மந்திரத்தின் அதி தேவதையல்லவா அவள்!
காயத்ரீ என்றால் எவன் தன்னை அன்போடும், பக்தியோடும் உச்சரிக்கிறார்களோ அவர்களைக் காக்கும் மந்திரம் ஆகும். அந்த மந்திரத்தின் ‘தேவதை’ வடிவத்தையும் ‘காயத்ரீ’ என்ற சொல் குறிக்கும்.
“காயத்ரீம் சந்தஸாம் மாதா” என்கிறது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயாக இருப்பது இந்த காயத்ரீ மந்திரம்.
“கயான் ப்ராணான் த்ராயதே ஸா காயத்ரீ” என்று சதபதப்ராஹ்மணம், ஐதரேயப்ராஹ்மணம் போன்ற நூல்கள் வாக் மற்றும் பிராணனைக் காக்கும் மந்திரம் காயத்ரீ என்று கூறுகின்றன. இதுபோல பாரத்வாஜ ஸ்மிருதி, ப்ருஹத் யோகியாக்ஞவல்க்ய ஸ்மிருதி, ஸ்கந்தபுராணம் (காசீ காண்டம்) போன்ற நூல்களும், காயத்ரீ மந்திரம் அனைத்துப் பாபங்களிலிருந்தும் நம்மைக் காக்கிறது என்கின்றன. காயத்ரீ மந்திரத்தில் மொத்தம் மூன்று பாதங்கள். அதாவது அடிகள். ஆகவே, அதற்கு ‘த்ரிபதா’ காயத்ரீ என்றும் பெயர். ஒவ்வொரு பாதத்திற்கும் எட்டு, எட்டு அக்ஷரங்களாக மொத்தம் 24 அக்ஷரங்கள் கொண்டது இந்த மந்திரம். ஒவ்வொரு பாதமும் ஒவ்வொரு வேதத்தின் ஸாரம். அதாவது, ரிக், யஜுர், ஸாமம் என்ற மூன்று வேதங்களின் நுண்ணிய கருவினால் உருவானது. இதனை,
“த்ரிப்ய ஏவது வேதேப்ய: பாதம் பாதமதூவஹம்”
என்கிறது மனுஸ்மிருதி. சாஸ்திர ப்ரகாரம் செய்ய வேண்டிய காரியங்களுக்கெல்லாம் முக்கியமானது காயத்ரீ ஜபம்.
காயத்ரீ மந்திரத்தில் மூன்று சக்திகள் அடங்கியுள்ளன. ஆகையால்தான் இந்த மந்திரத்தை மூன்றுவேளை அதாவது காலை, பகல், மாலை வேளைகளில் ஜபிக்க வேண்டும். காலை வேளை விஷ்ணுவுக்கு உகந்தது. அப்பொழுது, காயத்ரீ தேவதையாக, விஷ்ணு வடிவத்தில் காட்சியளிப்பவளாகத் தியானிக்க வேண்டும், பகல் ப்ரஹ்மா வுக்கு உகந்தது. அப்பொழுது ஸாவித்ரி தேவதையாக, ப்ரஹ்ம வடிவினளாய் உபாஸிக்க வேண்டும். மாலை சிவனுக்கு உகந்தது. அப்பொழுது ஸரஸ்வதீ தேவியாக சிவ வடிவத்தில் தியானிக்க வேண்டும்.
“காயத்ரீ நாம பூர்வாஹ்னே ஸாவித்ரீ மத்யமே தினே |
ஸரஸ்வதீச ஸாயாஹ்னே ஸைவ ஸந்த்யா த்ரிஷுஸ்ம்ருதா ||”
ஸரஸ்வதீச ஸாயாஹ்னே ஸைவ ஸந்த்யா த்ரிஷுஸ்ம்ருதா ||”
“காயத்ரீயில் ஸகல வேதமந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அது தான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குப் பலனில்லை. மோக்ஷத்துக்குப் போக உதவும் “ஹிப்நாடிச” மந்த்ரம் காயத்ரீ” என்கிறார், காஞ்சி பரமாசார்யாள்.
“புராதநீ பூர்ண வித்யா பரப்ரஹ்ம ப்ரகாசினீ |
அனந்த மஹிமா யுக்தா அநந்த வ்யாகரணைர் யுதா ||”
அனந்த மஹிமா யுக்தா அநந்த வ்யாகரணைர் யுதா ||”
இந்த காயத்ரீ மந்திரமானது மிகவும் புராதனமானது. பூரணமாக வித்யைகளைத் தரவல்லது. பரப்ரஹ்மத்தை பிரகாசப்படுத்துவது. எல்லையில்லா மஹிமைகளோடும் இலக்கணங்களோடும் அமைந்தது என்று கூறுகிறது மேற்கண்ட ஸ்லோகம்.
‘திரிபுராதகனம்’ செய்யும் போது சிவபெருமான் தனது தேரில் இந்த காயத்ரீ மந்திரத்தை ஒரு கொடி போல் தொங்க விட்டிருந்ததாக மஹாபாரதம் கூறுகிறது. (அத் 34 கர்ணபர்வம்).
காயத்ரீயை ஒரு முறை உச்சரித்தால் அந்த நேரம் செய்த பாபம் போகும். பத்துமுறை ஜபித்தால் ஒரு நாள் பாபம் விலகும். அதுபோல 100 முறை உச்சரித்தால் ஒருமாத பாபமும், 1000 முறை உச்சரித்தால் ஒரு வருட பாபமும் போகும். அதனால் தான் ஆவணி அவிட்டம் முடிந்த மறுநாள் காயத்ரீ ஜபத்தை 1008 முறை செய்யவேண்டும் என்று நமது முன்னோர்கள் வரைமுறைப் படுத்தினர். இந்த மந்திரத்தை ஒரு லக்ஷம் முறை ஜபித்தால் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பாபங்கள் கரைந்து விடும். பத்து லக்ஷம் முறை ஜபித்தால் ஒருவரது பூர்வஜன்ம பாபங்கள் தொலைந்து போகும். ஒரு கோடி முறை உச்சரித்தால் ஒருவரின் அனைத்து ஜன்மங்களிலும் ஏற்பட்ட, பாபங்கள் நீங்கும். ஒருவர் பத்து கோடி முறை காயத்ரீயை உச்சரித்தால் அவருக்கு, தெளிவு பிறந்து ‘மோக்ஷம்’ கிட்டும், என்கிறது தேவீ பாகவதம். (9ஆவது ஸ்கந்தம்)
காயத்ரீயை காலை, பகல், மாலை வேளைகளில் மூன்று விதமாக, தியானம் செய்ய வேண்டுமென்று முன்னமே சொன்னோம். இப்போது அந்த மூன்று வேளைகளிலும் எந்த எந்த வடிவில் தியானிப்பது என்று பார்ப்போம்.
காலையில் காயத்ரீ தேவதை சிவந்த நிறத்தோடு, சூரிய மண்டலத்தின் நடுவில் இரண்டு கைகளை உடையவளாய், ஜபமாலையும், கமண்டலுவும் வைத்துக்கொண்டு, ஹம்ஸ (அன்னபக்ஷி) ஆஸனத்தில் அமர்ந்தவளாக இளம்பெண்ணாகத் தியானிக்க வேண்டும்.
பகலில் அவளையே ஸாவித்ரீயாக, சூரிய மண்டலத்தின் நடுவில், நீலம் அல்லது கறுப்பு நிறத்தவளாய், நான்கு கைகளுடன் கூடியவளாய், மூன்று கண்கள் உடையவளாய், சங்கு, சக்ரம், கதை, தாமரை ஆகியவற்றைக் கைகளில் ஏந்தி, கருட ஆஸனத்தில் அமர்ந்தவளாய், யுவதியாக தியானிக்க வேண்டும்.
மாலை வேளையில், ஸரஸ்வதி ரூபமாகவும், சூர்யமண்டல நடுவில் ஒளிர்பவளாகவும், வெண்மை நிறத்தவளாய், நான்கு கைகளுடன்; திரிசூலம், டமரு (உடுக்கை) பாசம்(கயிறு) பாத்ரம் (கலசம்) ஆகியவற்றுடன், வ்ருஷப ஆஸனத்தில் அமர்ந்தவளாகவும், முதியவயதினளாய் ருத்ராணி என்ற வடிவத்தில் தியானிக்க வேண்டும்.
காயத்ரீக்கு இரண்டுவிதமான த்யான ஸ்லோகங்கள் உண்டு. சிவப்பு, தங்கமயம், நீலம், வெண்மை, இந்த நிறத்தோடு கூடியவளை, முக்கண்களோடு பிரகாசிப்பவளை, சிவப்பு வர்ண மான மணிமாலை அணிந்தவளை, குமாரி உருவத்திலிருப்பவளை, காயத்ரீயை, தாமரைமலரில் அமர்ந்திருப்பவளை உள்ளங் கையில் ஒரு குண்டத்தை வைத்திருப்பவளை, தாமரைக் கண்ணினளாய் ஹம்ஸ வாகனத்தில் உள்ளவளை பூஜிக்கிறேன். (தேவீ பாகவதம்)
“ரக்த ச்வேத ஹிரண்ய நீலதவளைர் யுக்தாம் த்ரிநேத்ரோஜ்வலாம்
ரக்தாம் ரக்த நவஸ்ரஜம் மணிகணைர் யுக்தாம் குமாரீமிமாம் |
காயத்ரீம் கமலாஸநாம் கரதல வ்யானத்த குண்டாம்புஜாம்
பத்மாக்ஷீம் ச வரஸ்ரஜம் ச தததீம் ஹம்ஸாதி ரூபாம் பஜே ||”
இரண்டாவது தியானம்.
ரக்தாம் ரக்த நவஸ்ரஜம் மணிகணைர் யுக்தாம் குமாரீமிமாம் |
காயத்ரீம் கமலாஸநாம் கரதல வ்யானத்த குண்டாம்புஜாம்
பத்மாக்ஷீம் ச வரஸ்ரஜம் ச தததீம் ஹம்ஸாதி ரூபாம் பஜே ||”
இரண்டாவது தியானம்.
“முத்து, பவளம், தங்கம், வைரம், வெண்மை ஆகியவற்றின் பளபளப்பைப் பிரதிபலிக்கின்ற ஜொலிக்கும் முகமுடையவளை, மூன்று கண்கள் உடையவளை, தனது ரத்ன மகுடத்தில் சந்திர கலையைத் தரித்தவளை, உண்மைப் பொருளை விளக்கும் மந்திரமயமான சொற்களைத் தன்னுள் கொண்டுள்ளவளை, காயத்ரீயை, தன்னுடைய பத்து கைகளில் வரத முத்ரை, அபயமுத்ரை, அங்குசம், சாட்டை, வெண்மையான மண்டை ஓடு, கயிறு, சங்கு, சக்ரம், இரண்டு தாமரைகளை வைத்துக் கொண்டிருப்பவளை பூஜிக்கிறேன் (தேவீ பாகவதம் 12/3)”
“முக்தா வித்ரும ஹேம நீல தவளச்சாயை முகைஸ்த்ரீக்ஷணைர்
யுக்தாமிந்து நிபத்த ரத்னமகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம் |
காயத்ரீம் வரதாபயாங்குச கசா: சுப்ரம் கபாலம் குணம்
சங்கம் சக்ரமதாரவிந்தயுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே ||”
யுக்தாமிந்து நிபத்த ரத்னமகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம் |
காயத்ரீம் வரதாபயாங்குச கசா: சுப்ரம் கபாலம் குணம்
சங்கம் சக்ரமதாரவிந்தயுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே ||”
என்று மேற்குறிப்பிட்ட இரண்டு வகையான தியானம் செய்து கொண்டு காயத்ரீயை உபாஸிப்பது சாலச்சிறந்தது.
பரப்ரஹ்ம ஸ்வரூபிணி, மோக்ஷமளிக்கும் தேவதை ப்ரஹ்ம தேஜஸைக் கொடுப்பவள், அனைத்து சக்திகளையும் அருள்பவளே ‘காயத்ரீ’ என்கிறது ஒரு ஸ்லோகம்.
“பரப்ரஹ்ம ரூபா ச நிர்வாண பத தாயினீ |
ப்ரஹ்ம தேஜோமயீ சக்திஸ் ததிஷ்டாத்ரு தேவதா ||”
ப்ரஹ்ம தேஜோமயீ சக்திஸ் ததிஷ்டாத்ரு தேவதா ||”
இத்தகைய காயத்ரீ மந்திரத்தை உச்சரித்து, காயத்ரீ தேவியின் அனுக்ரஹம் பெற்றதாலேதான் ஸ்ரீ யோகீச்வர யாக்ஞவல்க்யர் சூரியனை அணுகி, சுக்லயஜுர்வேதத்தைப் பயின்று, உலகில் உலவ விட்டார்.
காயத்ரீ மந்திரம், தெள்ளிய அறிவையும், ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தரும் திறன் படைத்தது. இந்த மந்திரத்தை மன ஒருமைப்பாட்டோடு உச்சரிக்கும் போது, உடலின் வெளியிலிருந்து ஏதோ ஒரு மின்சாரம் பாய்வது போல உடலிலுள்ள நாடி நரம்புகளில் விறுவிறுப்பு ஏற்படும். இதனை ஒவ்வொருவரும் உணரலாம். இதுவே நம் உடலோடு சம்பந்தப்பட்டுள்ள, மனம், புத்தி, உயிர், இதயம், ஆன்மா ஆகியவற்றைச் சுத்தப்படுத்தி, நம்மை இயக்கிக்கொண்டிருக்கின்ற பேரான்மாவின் உண்மை நிலையைக் காட்டும்!
தீய எண்ணங்கள், தீய காட்சிகள், தீய போக்குகள், போன்ற மனிதனைக் கீழ்மைப்படுத்தும் பாபங்கள், “தியோ யோ ந: ப்ரசோதயாத்” என்ற வரிகளின், சொற்களின் ஒலிகளால் விரட்டப்படும். நல்லவை சேர்ந்து அல்லவை தொலையும்.
உலகைக் காக்கும் ப்ரஹ்மா முதல், விஸ்வாமித்ரர், சங்கரர், சௌனகர், அத்ரி, வியாசர், சாகர், வசிஷ்டர், பராசரர் போன்ற மஹரிஷிகளும், ஆதி சங்கர, இராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், பண்டித மதன் மோகன் மாளவியா, இரவீந்திர நாத தாகுர், ஆரிய ஸமாஜத்தை நிறுவிய தயானந்தர் போன்ற பற்பல மகான்களும், காயத்ரீ மந்திரத்தின் உயர்வை விவரித்திருக்கிறார்கள். அனுபவத்தில் உணர்ந்தவர்கள் ஏராளம். சொல்லி மாளாது.
இந்த காயத்ரீ மந்திரம் முதன் முறையாக ரிக்வேதத்தில் மூன்றாவது மண்டலத்திலுள்ளது. அதன்பிறகு யஜுர் வேதத்திலும் காணப்படுகிறது. ஆனால், இந்த மந்திரத்திற்கு முன்பு ப்ரணவம் அதாவது “ஓம்” சொல்லப்படவில்லை. ‘ப்ரணவ ஹீனம் ப்ராண ஹீனம்’ என்ற வாக்கியப்படி, இந்த “ஓம்” என்ற ஒலியைச் சேர்த்து உச்சரித்தலே பலன் தரும் என்பதாக முதன்முதலாக யாக்ஞவல்க்ய மஹரிஷி ‘ஓம்’ சேர்த்து உச்சரித்ததாக யாக்ஞவல்ய ஸம்ஹிதை கூறுகிறது. அந்த காயத்ரீ மந்திரம், இதுவே.
“ஓம் பூர் புவ ஸ்வ:”
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்||
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்||
மைத்ராயணீ உபநிஷத் இந்த மந்திரத்திற்கு விளக்கம் அளிக்கிறது. ‘ஓம்’ என்பது ப்ரஹ்ம ஸ்வரூபம். ஆண்பால், பெண்பால், பலவின்பால் (புல்லிங்க, ஸ்திரீலிங்க, நபும்ஸக) ஆகியவற்றை அடக்கிய “பொதுவானது”. அக்னி, வாயு, ஆதித்யன் ஆகிய மூன்று பேரொளிகளைக் குறிக்கிறது. ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரர் ஆகிய மூன்று முழுமுதற் கடவுளர்களைக் குறிக்கிறது. அக்னியின் மூன்று பிரிவுகளான கார்ஹபத்யம், தக்ஷிணாக்னி, ஆஹவனீயம் ஆகியவற்றைக் குறிக்கிறது. ரிக், யஜுர், ஸாமம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூன்று உலகினையும், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றையும் குறிக்கிறது. ப்ராணன், அக்னி, சூரியன் என்ற உஷ்ணங்களாகவும், அன்னம், ஜலம், சந்திரன் என்று உயிரைப் போஷிப்பவனாகவும், புத்தி, மனம், அஹங்காரம் என்ற சேதனமாகவும், பிராணன், அபானன், வியானன் என்ற உயிர்நிலைகளாகவும், யாகத்தில் தியாகம் செய்யும் யஜமானன் ப்ரஸ்தோதா, அர்ப்பிதா என்பவர்களாகவும், இந்த ஓம் என்ற அக்ஷாம் பரமாகவும், அபரமாகவும் அனைத்துமாக ஆயிற்று. “தத்ஸவிதுர் வரேண்யம்’ என்று தொடங்கும் காயத்ரீ மந்திரத்தில், உலகைப் படைக்கும் ‘ஸவிதா’ எனப்படும் சூரியனே சிறந்த ஆத்ம ப்ரகாசத்தின் பிரதிநிதியாகப் போற்றப்பட வேண்டும். ‘பர்கோ தேவஸ்ய தீமஹி’ என்று இரண்டாவது அடியில், இந்த சூரிய தேவனுடைய சிறந்த ஒளி எதுவோ அதை தியானிக்கிறோம். தியோ யோந: ப்ரசோதயாத் என்ற மூன்றாவது அடியில் நம்முடைய புத்தி சக்திகளை தூண்டுபவர் எவரோ அந்தக் கடவுளைத் துதிக்கின்றோம் என்று பொருள்.
அளவிலாப் புகழும், குறைவிலா நலன்களும், பேரானந்தமும் குவிக்கும் தேவீ காயத்ரியை, காயத்ரீ மந்திரத்தின் மூலமாக சரணடைந்து பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வோம்.
இதனையே ஓர் அதர்வ வேத மந்திரம்,
ஸ்துதாமயா வரதா வேதமாதா
ப்ரசோதயந்தாம் பாவமானீ த்விஜானாம் |
ப்ரசோதயந்தாம் பாவமானீ த்விஜானாம் |
ஆயு: ப்ராணம் ப்ரஜாம் பசும் கீர்த்திம் த்ரவிணம்
ப்ரஹ்ம வர்ச்சஸம் மஹ்யம் தத்வா வ்ரூத ப்ரஹ்மலோகம் ||
ப்ரஹ்ம வர்ச்சஸம் மஹ்யம் தத்வா வ்ரூத ப்ரஹ்மலோகம் ||
“என்னால் போற்றப்படும், வரங்களை அள்ளித் தரும். வேதமாதா எனது புத்தியைப் பிரகாசப்படுத்தி, பாபங்களைப் போக்கி புனிதப்படுத்தி, ஆயுள், பிராணன், பிரஜைகள், பசுக்கள், கீர்த்தி, செல்வம், ப்ரஹ்ம தேஜஸ் ஆகியவற்றை அளித்து கடைசியில் என்னை ப்ரஹ்ம லோகத்திற்கு அழைத்துச் செல்வாளாக!” என்று வேண்டுகிறது.
காயத்ரீ மந்திரத்தை ஆராய்ச்சி செய்த உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதை யி.ஙி.ஷி ஹால்டேன் கூறியது இது: “உலகெங்கிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்ற விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிக் கூடங்களின் கதவுகளில் காயத்ரீ மந்திரத்தை எழுதிவைக்க வேண்டும்”
“The gayatri mantra should be carved on the doors of every laboratory in the world” நாமும் நம் உள்ளத்தில், இல்லத்தில் எழுதி வைத்துப் பயன் பெறுவோம்!
நன்றி: அம்மன் தரிசனம் மாத இதழ்
No comments:
Post a Comment