பகவான் நமக்கு பூஜ்யனானவன்
நம்முடைய வாழ்க்கையில் சுகம், துக்கம் இரண்டும் சமிஸ்ரமாக இருக்கிறது. யாரும் பிறந்ததிலிருந்து கடைசி வரையிலும் சுகமாகவே இருந்தான் என்று சொல்ல முடியாது. அதேபோல் ஆயுசு முழுசும் துக்கத்திலேயே இருந்தான் என்றும் சொல்ல முடியாது. “சுகத்யானம் தரம் துக்கம் துக்கத்யானம் தரம் சுகம்” சுகத்துக்குப் பிறகு துக்கம், துக்கத்துக்குப் பிறகு சுகம்” இது மனுஷ்ய ஜீவனத்துலே ஒவ்வொருத்தனுடைய அனுபவத்துலே இருக்கக்கூடிய விஷயம். ஆனால் சுகம் வந்த சமயத்துலே எல்லோரும் சந்தோஷமாகவே இருப்போம். துக்கம் வந்த சமயத்துலே மட்டும் அந்த சந்தோஷமெல்லாம் எங்கே போகுமோ சொல்ல முடியாது. அவன் ஓர் அதி சாதாரணமான மனிதன் ஆகட்டும். ஒரு பெரிய சக்ரவர்த்தி ஆகட்டும். துக்கம் வந்தது என்று சொன்னால் அவனுடைய முகபாவமே மாறிப் போய் விடும். எவ்வளவு சக்தி இருந்தாலும் அது எதுவுமே அவனுடைய துக்கத்தைப் போக்குவதற்கு அந்த சமயத்துலே உபயோகத்துக்கு வராது. நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அல்லது அவர் ரொம்ப ஐஸ்வர்யசாலி அதனால் அவருக்குத் துக்கம் வராது என்று சொல்ல முடியுமா? பணக்காரனானால் அவனுக்குத் துக்கமே இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது துக்கம் வந்தாலும் அவனுக்கு பணம் இருக்கறதுனாலே அவனை ஒன்றும் செய்யாது என்று சொல்ல முடியுமா? ஒண்ணும் சொல்ல முடியாது. அந்த சமயத்துலே நமக்கு என்ன தோன்றும்? இந்த துக்கத்தை யாரிடம் நாம் தெரிவித்துக் கொண்டால் இது நீங்கும் என்கிற ஒரே ப்ரச்னை நம் மனத்தில் உத்பவிக்கும். அதை யாரிடத்தில் தெரிவித்துக் கொள்ள வேண்டும்? நம் போல் சாதாரணமான மனிதனிடம் அதைத் தெரிவிக்கப் போனால் அவன் சொல்லுவான்.” நீ என்னவோ ஒரு துக்கம் என்னிடம் சொல்ல வந்திருக்கிறாய். அதைவிடப் பெரிய துக்கம் எனக்கு இருக்கிறது. அதை உன்னிடம் நான் சொல்கிறேன்” என்பான். என்னமோ ரொம்ப வயிற்று வலி வந்திருக்கிறது என்று சொல்லி ஒருத்தன் ஒரு டாக்டரிடம் போனான். அங்கே டாக்டர் சொன்னார், “நான் ஒரு மாசமாக வயிற்றுவலி அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் அப்பா! நான் இந்த வயிற்றுவலிக்கு என்ன பண்ணனும்னு தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன்” என்று சொன்னாராம். அப்போது என்ன பிரயோஜனம்? அதற்கு ஓர் இடத்துலே ஒரு மகான் சொன்னார்,
“பவவிரிதீஷ புது விஷதமன: மானஸாத் பிஷகே ச சங்கரசேவ்ய:
பத மோ தைவ்யோ விஷகித யங்கிலகனமே ஸ்ருதி ஸ்வயம் ப்ரா:
பத மோ தைவ்யோ விஷகித யங்கிலகனமே ஸ்ருதி ஸ்வயம் ப்ரா:
இது எல்லாவற்றுக்கும் வைத்யர், பெரிய வைத்யர் ஒருத்தர் இருக்கார். வேதமே அந்த வைத்யரைப் பற்றிச் சொல்கிறது.
“அத்ய போசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ விஷக்”
ப்ரதமோ தைவ்யோ விஷகித யங்கில ஜனதி ஸ்ருதி ஸ்வயம் ப்ரா
ப்ரதமோ தைவ்யோ விஷகித யங்கில ஜனதி ஸ்ருதி ஸ்வயம் ப்ரா
நாம் ஸ்ருதி, வேதம் என்று சொன்னால் “தாயார்” மாதிரி நினைத்துக் கொண்டு இருக்கிறோம். உலகத்துலே எந்த வ்யக்திக்கும் அவனுடைய பரிபூர்ணமான ஸ்ரேயஸை எப்போதும் விரும்பக் கூடியவள் தாயார் ஒருத்திதான். அதற்கு அப்புறம்தான் மீதிப் பேர் எல்லோருமே. அதுதான் பகவத் பாதாள் ஓர் இடத்திலே சொன்னார். “கு புத்ரோ ஜாகே தத் க்வசித பிகுவா தா கதமபி”
பையன் எவ்வளவு கெட்டுப் போனாலும் தாயார் மட்டும் அவன் மேல் ப்ரீதி வைத்துக் கொண்டே இருப்பாள். அதனால்தான் தாயார் என்பவளுக்கு அவ்வளவு மகத்துவம் நம்முடைய சம்ஸ்க்ருதியிலே. நம்முடைய பாரதீய பரம்பரையிலே. எப்படி தாயார் என்பவள் தன்னுடைய புத்ரனுடைய ஹிதத்தைத்தான் எப்போதும் விரும்புவாளோ வேதமும் அப்பேர்ப்பட்டது. நம்முடைய ஹிதத்தைச் சொல்வதற்காகத்தான் வேதம் இருக்கிறது. அதனாலே “யஸ்கில ஜனனீ ஸ்ருதி: “வேத மாதா என்ன சொன்னாள், “ப்ரதமோ தைவ்யோ விபுக்” ஆதி வைத்யன், எல்லோருக்கும் வைத்யன், அந்த பகவான். அதனால் ஆஸ்ரயிச்சால் அவரை ஆஸ்ரயிக்கணும். அந்த பகவத் சந்நிதியிலே நம்முடைய துக்கத்தைத் தெரிவித்துக் கொண்டால் அந்த பகவான் நிவாரணம் செய்வான். சாஸ்த்ரத்திலே ஒரு நியாயம் உண்டு
“நஹி பிக்ஷுகோ பிஹுகான் ந்யாத தே ஹிதி அன் யஸ் மின் லாதரி”
ஒரு பிச்சைக்காரன் பிச்சை வேண்டி வந்தால் பணக்காரனிடம் போகணுமே தவிர இன்னொரு பிச்சைக்காரனிடம் போய்ப் பிச்சை கேட்டால் அவன் என்ன கொடுப்பான்? “நாம் இரண்டு பேரும் சேர்ந்து புறப்படுவோம் பிச்சைக்கு என்பான். அதேபோல் நம்முடைய துக்கத்தைப் போக்குவதற்கு எந்த துக்கத்தோடும் சம்பந்தம் இல்லாதவனிடம் போகணுமே தவிர இன்னொரு துக்கிதமானவனிடம் போனால் என்ன ஆகும்? அதனால் அப்பேர்ப்பட்ட துக்க சம்பந்தம் ஒன்றும் இல்லாதவன் என்று சொன்னால் பரமேஸ்வரன் ஒருத்தன்தான். வேறு யாரும் இல்லை. அதனால் நம்முடைய துக்கத்தை நீக்கக் கூடிய சக்தி பகவானுக்குத்தான் இருக்கிறது. வேறு யாருக்கும் இல்லை. ஆனால் நம்முடைய மனசு எப்படி போகிறது என்று சொன்னால் அந்த பகவான் பக்கம்தான் போகிறது. நாம் நினைப்பது யாரோ ஒரு பெரிய மனுஷன் ஒரு பெரிய அதிகாரத்துலே இருக்கிறவன் அவனிடம் போனால் நம்முடைய எல்லா இஷ்டங்களும் சித்திக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் ஒரு பெரியவர் சொன்னார், நம்முடைய இந்த பாரத நாட்டிலே எத்தனை மகான்கள் பிறக்கலை, எத்தனை பெரியவர்கள் பிறக்கலை, எத்தனை பக்தர்கள் பிறக்கலை, எத்தனை வேதாந்திகள் பிறக்கலை, அதிலும் ஒருவர் சொன்னார் நீங்கள் யாரை ஆஸ்ரயிக்கப் போகிறீர்கள் (உங்கள் ஜீவனத்துக்காக இன்னொருவர் சொன்னார் எத்தனை ராஜாக்கள் இல்லை. ஒரு ராஜாவிடம் போனால் போதுமே நம்முடைய ஜீவனம் நடக்கும். அப்படி என்று. அன்றைக்கு அந்த பக்தர் சொன்னார். நீங்கள் என்னவோ அப்படி சொல்கிறீர்கள். எனக்கு அப்படி படலையே நான் என்ன பண்ணட்டும்? உங்களுக்கு என்ன பட்டது? அப்போது அவர் சொன்னார் :
“க்ஷோணீ கோண ச தாம் ச பாலன கலா துர்வார கர்வான லக்ஷீ
ஜக்ஷீ ஜீத்நோந்த்ர நரேந்த்ர சாதுர கனா தன்யான் ன மன்யா மஹே”
தேவம் சேவிது மேவ நிஸ்சினு மஹேயோசௌ
தயாளு புரா கானா முஷ்டி முசே குசேல முனயே
தத்வே த வித்வே சதாம்”
ஜக்ஷீ ஜீத்நோந்த்ர நரேந்த்ர சாதுர கனா தன்யான் ன மன்யா மஹே”
தேவம் சேவிது மேவ நிஸ்சினு மஹேயோசௌ
தயாளு புரா கானா முஷ்டி முசே குசேல முனயே
தத்வே த வித்வே சதாம்”
எந்த ராஜாக்களைப் போய் ஆஸ்ரயிக்கச் சொல்கிறீர்கள்? இந்த ராஜாக்களுடைய யோக்யதை என்ன? இவர்கள் நமக்கு என்ன கொடுப்பார்கள்? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?
“க்ஷோணீ கோண ச தாம் ச பாலன கலா
துர்வார கர்வான லக்ஷீப்யம்
துர்வார கர்வான லக்ஷீப்யம்
அவர்கள் அதிகாரம் இருக்கிற பூபாகம் எவ்வளவு? இந்த அதி விசாலமான பூமண்டலத்துலே ஒரு மூலையிலே ஓர் அம்சம் இவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டு இருக்கிறது. கேவலம் அது மாத்ரத்திலேயே தன்னை விட்டால் யாருமில்லை, தனக்கு சமானமானவன் யாருமில்லை என்று சொல்லி கர்வப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே அவர்களையா ஆஸ்ரயிக்கச் சொல்கிறீர்கள்? அவர்களுக்கு இருக்கிறது எவ்வளவு? அவர்கள் நமக்குக் கொடுக்கிறது எவ்வளவு? அவர்களுக்கு எவ்வளவு இருந்தாலும் இந்த விசாலமான பூமண்டலத்தைப் பார்த்தால் அவர்களுடைய அதிகாரம் அத்யல்பம். ஆனால் அவர்களுடைய நடவடிக்கை எப்படி இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
“சௌஜன்யாம் பு மருஸ்தவி” “சுஜன பாலேக் ய க்ஷு க்ஷீவிருக்தி:
புனக்யோ ஸ்த்னா க்ருஷ்ண சதுர்க்தஸி
சரளதா யோகஸ்ய புஸ்சத்சடா
யபிரேஷா ஸதுராத்தா கவி வரை:
ராஜா வயி யவ்யதே ஏதாம் சூலினி
புனக்யோ ஸ்த்னா க்ருஷ்ண சதுர்க்தஸி
சரளதா யோகஸ்ய புஸ்சத்சடா
யபிரேஷா ஸதுராத்தா கவி வரை:
ராஜா வயி யவ்யதே ஏதாம் சூலினி
பக்தி மாத்ரசுலஜே ஏவாக்ய கௌசலம்”
ஐயோ! இந்த ராஜாக்களைப் பற்றிக் கேட்கிறீர்களா? அங்கே ‘சௌஜன்யம்’ என்பது கொஞ்சமும் கிடையாது. “சௌஜன்யம்” என்று சொன்னால் நாம் ஏதாவது ஒரு வார்த்தை சொன்னால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு ஸ்வபாவம் வேண்டுமே அது கிடையவே கிடையாது. நாம் எதிரில் வரும்போதே ஏண்டா இவன் வந்தான் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறார்களே தவிர என்னவோ இவர் படித்தவர் ஏதோ ஒரு நல்ல வார்த்தை சொல்வதற்கு வந்திருக்கிறார். அதைக் கேட்போம் என்கிற “சௌஜன்யமே” கிடையாது. இதை வைத்துத்தான் சொன்னார்கள். “நல்ல வார்த்தை யாருக்கு சொல்வது ஐயா! உலகத்துலே, ஏதாவது ஒரு நல்ல வார்த்தை சொல்லுவோம் என்றால் யாருமே கிடைக்க மாட்டேன் என்கிறார்களே?” என்ன இப்படி சொல்றீர், இத்தனை பேர் இருக்கிறபோது? என்றால் பண்டிதர்களுக்கு சொல்லப் போனால் “போத்தா ரோமச அக்ஷரக்ரஸ்தா: அவர்களுக்கு சொன்னால் இவன் யார் நமக்கு சொல்றது? அட போய்யா! உன்னைவிட நிறைய எனக்குத் தெரியும். ஆஸ்ரயிக்கறது ஒண்ணும் கிடையாது. ஆனால் நாம் அவர்களிடம் சொல்லப் போனால் உன்னை விட நிறையத் தெரியும் என்று சொல்கிறார்கள் அவர்கள். அல்லது ராஜாக்களிடம் சொல்லப் போனோம் என்றால் “அதெல்லாம் கேட்க எனக்கு நேரம் இல்லையே. நீங்கள் இப்போது போங்களேன்” என்பார். இனி யாருக்கு சொல்லணும்? மீதிப்பேர் யாருக்காவது சொல்லணுமானால் நாம் அவ்வளவும் சொல்வதைக் கேட்டுவிட்டு அந்த ஐயா என்ன சொன்னாரோ எனக்குப் புரியவே இல்லை! என்பானாம். கடைசியில் என்னவெல்லாமோ சொன்னார் ஐயா! எனக்கு மட்டும் ஒண்ணும் புரியவில்லை. அப்போது யாரிடம் சொல்லட்டும் என்றார். அதனால் இந்த ராஜாக்கள் “சௌஜன்யம்” என்பது கொஞ்சம் கூட கிடையாது. ஏதாவது சத்குணங்கள் இருக்கிறதா? இருக்கிறது. க்ருஷ்ண பக்ஷத்து சதுர்த்தசி அன்றைக்கு சந்திரனுடைய வெளிச்சம் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு சத்குணங்கள் இருக்கிறது. அமாவாஸைக்கு முதல்நாள் “சந்த்ரிகை” எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு சத்குணங்கள் இருக்கிறதாம். “புனக்யோத் ஸ்னா க்ருஷ்ண சதுர்த்தஸி” சரளதா யோகஸ்ய புத்யத்சடா” என்ன ஒரு ருஜுவான அர்த்தம் இருக்கிறதோ ருஜுவான அர்த்தம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் மனசுலே என்ன நினைக்கிறானோ அதை வாயிலே சொல்லணும். அப்படியே செய்யணும். அப்படி இருந்தால் அவனுடைய வர்த்தனம் ருஜுவாக இருக்கிறது, நேர்வழி என்று அர்த்தம். அது ஏதாவது இருக்கிறதா என் கேட்டால் ஸ்ப்ய புஸ்யஸ்சடா” நாய் வால் எவ்வளவு நேரா இருக்கிறதோ அவ்வளவு நேர்வழி அவர்களுக்கு. இப்படி இருந்தாலும் இந்தக் கவிகளெல்லாம் இந்த ப்ரபுக்களுக்கு இல்லாத குணங்களை எல்லாம் சொல்லி அவர்களைப் புகழ்ந்து கொண்டு இருக்கிறார்களே. நிஜமாக அவர்களுடைய அந்த வாக்கை பகவானை ஸ்துதிக்கறதுக்கு உபயோகித்தால் அவர்கள் மோக்ஷத்தை அடைய மாட்டார்களா? ஆனால் அப்படிப்பட்ட ராஜாக்களை என்னை சேவிக்க சொல்றயாப்பா? நான் அங்கு போக மனசில்லை. “ஷிப்ய ஷித்ர நரேந்த்ர ஜாது ரசனா தன்யாம் நமன்யா மஹி”
“பின்னே உங்களுக்கு யாரிடம் போகணும்னு இருக்கு? அதையாவது சொல்லுங்கோளேன்.”
“நாங்க நினைக்கிறோம் ஒரு மகானிடம் போகணும் என்கிற எண்ணம் இருக்கு எங்களுக்கு”
“அது என்ன ஓய்! அவ்வளவு பெரிய மஹான் யாரு?
“தேவம் ஸ்தீவிதுமே வ நிஸ்சின் மஹே” யாரப்பா அந்த மஹான்
“யோசௌ தயாளு புராகானா முஷ்டி முசே
குசேல முனயே தத்தேத்ம வித்தே சதாம்”
குசேல முனயே தத்தேத்ம வித்தே சதாம்”
“எங்க மஹான் ப்ரபு ஒருத்தர் இருக்கார். அவர் எப்பேர்ப்பட்டவர் என்று கேட்கிறீர்களா? ஒரு முறை ஸ்ரீமத் பாகவதத்தைப் புரட்டிப் பாருங்கள். “குசேலோபாக்யானத்தை” குசேலன் ஒரு தரித்ர ப்ராமணன். நல்ல ஆசாரவான். நன்கு படித்தவன். அவ்வளவுதான். ஐஸ்வர்யம் ஒண்ணும் கிடையாது. கிழிசல் துணி. வீட்டிலே சாப்பிடுவதற்கு மட்டும் நிறைய குழந்தைகள் இருந்தன. அவர்களுக்கு என்ன அவர் கொடுப்பது என்பது தெரியவில்லை. எப்படியோ காலம் போய்க் கொண்டு இருந்தது. ஒரோரு நாள் போவதே ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அவருடைய அதிர்ஷ்டம் சிறு வயசுலே க்ருஷ்ண பரமாத்மாவும் அவரும் சேர்ந்து படித்த ஒரு விஷயம். அதுதான் அவருக்கு இருந்த ஒரேயோர் அதிர்ஷ்டம். வேறொன்றுமில்லை. அதை ஞாபகப்படுத்தி அந்த குசேலருடைய சம்சாரம் “உங்க நண்பர் இருக்காரே க்ருஷ்ணர்! அவர் மஹான் ஆச்சே! அவரிடம் போகக்கூடாதா நீங்கள்? அவரை ஏதாவது கேட்கக் கூடாதா?” என்றாள். அது சரி எப்படி போகட்டும். “தரித்ர ஹஸ்தேயே நோபேயா ராஜானாம் தைவதம் குரு” என்று இருக்கிறது.
“ராஜா சந்நிதிக்கும், தெய்வ சந்நிதிக்கும், குருவினுடைய சந்நிதிக்கும், பகவத் சந்நிதிக்கும் வெறும் கையோடு போகக் கூடாது என்று சாஸ்த்ரம். அவர் என்னதான் என்னுடைய சகவாசி என்று இருந்தாலும் அவர் பகவான். நான் மனிதன். அவரிடம் எப்படி நான் வெறும் கையோடு போவது?” என்பது அவர் யோசனையிலே இருந்த சமயத்துலே அந்த அம்மாவுக்கு எங்கேயோ ஒரு மூலையிலே இருந்த ஒரு பிடி அவல் கிடைத்தது. பகவானுக்கு, வந்து நாம் எவ்வளவு சமர்ப்பிக்கிறோம் என்கிறது இல்லை அவருடைய ப்ரச்னை. அப்படி சமர்ப்பிக்கும்போது நம்முடைய உள்ளம் எப்படி இருக்கிறது என்பதைத்தான் அவர் பார்ப்பார். நம்முடைய உள்ளத்தைப் பார்க்கிறாரே தவிர வெளியில் நாம் அவருக்கு சமர்ப்பிக்கக்கூடிய பதார்த்தங்கள் எவ்வளவு என்பதில் இல்லை. நாம் அவரை ஸ்தோத்ரம் பண்ணுகிறபோது ரொம்ப நன்றாக ஜாகர்ணசுத்தியாக பேசிக்கொண்டு இருக்கிறோமா அதை பகவான் பார்க்க மாட்டார். இதற்கு ஓர் இடத்துலே ஒரு சின்னக்கதை சொல்வார்கள். கேரளத்துலே நாராயண பட்டத்ரி எல்லோருக்கும் தெரியும். “நாராயணீயத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ‘நாராயணீயம்’ தெரியாதவர்களே கிடையாது. ‘நாராயணீயம்’ எழுதின ‘பட்டத்ரி’ மகாவித்வான். இன்னொரு கவி அந்த குருவாயூரப்பன் பேரில் ஒரு ஸ்தோத்ரம் எழுதி இருக்கிறார் போல் இருக்கு. அவர் வந்து பட்டத்ரியிடம் காட்டினாராம். என்ன எல்லாம் தப்புத் தப்பாக இருக்கு என்று சொல்லிவிட்டாராம் பட்டத்ரி. அப்போது அவருக்கு ரொம்ப மனசுக்கு வேதனை ஆகிவிட்டது. பகவான் சந்நிதியிலே போய் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தாராம். அப்போது பட்டத்ரியும் அங்கே இருந்தாராம். பகவான் ப்ரத்யக்ஷம் ஆனார். அந்த பக்தன் எழுதிய கவித்வத்தை பஹு சந்தோஷமாக ஸ்வீகரிச்சார். அப்போது பட்டத்ரி சொன்னாராம், “அது எப்படி அவருடைய கவித்வம் உங்களுக்குப் பிடித்தது? அதைச் செய்ய விபக்தியே கிடையாது.” என்று சொன்னபோது பகவான் சொன்னானாம், விபக்தி இல்லாவிட்டாலும் பக்தி நன்றாக உண்டு. “விபக்தி நன்றாக இல்லாவிட்டாலும் பக்தி பூர்ணமாக உண்டு. அது போதும் எனக்கு” என்றார். அதனால் பகவான் அபேக்ஷிக்கிறது நம்முடைய பக்தி. பகவத் கீதையிலே பகவான் சொன்னது எல்லோருக்கும் தெரியும். “பத்ரம்புஷ்பம், பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி”
“எவன் பக்தியோடு எனக்குத் தருவானோ அதை நான் ஸ்வீகரிப்பேன்.” என்றார் பகவான். அந்த பக்தி என்பது இல்லாமல் வெறும் ஆடம்பரத்துக்காகவோ பத்துபேர் பார்க்கட்டும் என்பதற்காகவோ நாம் என்ன செய்தாலும் அது பகவானுக்குப் பிடிக்காது. அதனால் அந்தக் குசேலன் அந்த ஒரு பிடி அவலை பரம பக்தியோடு அந்த பகவானுக்கு சமர்ப்பித்தான். பகவான் வந்து அவனுக்கு குபேர ஐஸ்வர்யத்தைக் கொடுத்தான். “கானமுஷ்டி முசேகுசேலன் முநயே தத்தேத்ம வித்தே ஸராம்” அப்பேர்ப்பட்ட மஹான் ப்ரபுவை சேவிக்க நாம் விரும்புகிறோம். இனிமேல் யாரையும் சேவிக்க எங்களுக்கு மனசு வரவில்லை. நாங்கள் என்ன பண்ணட்டும்?” என்றார். அதனால் நாம் நமக்கு துக்கம் வந்தால் யாரை ஆஸ்ரயிக்கணும்? அந்த பகவானை ஆஸ்ரயிக்கணும். அந்த பகவானுக்கு இருக்கக் கூடிய மஹிமை அபாரமானது, என்பதுதான் நம்முடைய சித்தாந்தம். நம்முடைய ஸநாதன தர்மத்துலே நம்முடைய பாரதீய பரம்பரையிலே பகவான் என்கிற ஒரு தத்வம் அத்யந்த ப்ரமுகமான ஒரு தத்வம். அது மகத்துவமான தத்வம். அதை ஏதாவது மறந்து நாம் வ்யவகாரம் பண்ணினோமோ நமக்கு மானவத்வமே கிடையாது. பசுக்கள் இருக்கின்றன. அவற்றுக்கு பகவான் என்றால் தெரியாது. மனுஷன் என்றால் தெரியாது. நாமும் அந்த மாதிரி இருந்தால் அந்த நாலுகால் பசுவுக்கும் என்ன வித்யாசம்? அதனால் நம்முடைய பரம்பரையிலே நம்முடைய சம்ஸ்க்ருதியிலே பகவான் என்கிற ஒரு தத்வம் அத்யந்த, மிக ப்ரமுகமான ஒரு தத்வம். அந்த தத்வத்தை நாம் அங்கீகரிக்கத்தான் வேண்டும். அதை அங்கீகரிக்காமல் இருந்தால் மிகமிக அபராதம்.
அநேகம் பேர் கேட்டார்கள், “பகவான் அனுக்ரஹம் பண்றான் என்று நீங்கள் சொல்றேளே எப்படி அனுக்ரஹம் பண்றான்? நம் எதிரில் என்னவோ அவன் வந்தது கிடையாது. நாம் எத்தனையோ முறை கோவிலுக்குப் போய் இருக்கிறோம் தர்சனம் செய்திருக்கிறோம், தேங்காய் உடைத்தோம். எல்லாம் பண்ணினோம். நம் எதிரில் வந்து அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.” ஆமா அப்படி அவர் உங்கள் எதிரில் வந்து ஒரு வார்த்தை சொன்னால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? சாதாரணமான ஒரு மினிஸ்டர் உங்கள் எதிரில் வந்தாலேயே இங்கே பாலம் போட்டுக் கொடு அல்லது இதைப் போட்டுக் கொடு, அதைப் போட்டுக் கொடு என்று அவர் ப்ராணனை வாங்கறேள். இனி அப்பேர்ப்பட்ட சராசர ஜகத்துக்கு பொதுவான பகவான் உங்கள் எதிரில் வந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? அதனால் உங்கள் எதிரில் வரவே மாட்டான். அப்போது பின்னே பகவான் அனுக்ரஹம் பண்றான் என்பதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்கோ. அதற்கு முன்னோர்கள் சொன்னார்கள்
“நதேவா தண்டமாதாய ரக்ஷந்தி பசுபால வது
யம்மி ரக்ஷிதி மிச்சந்தி புத்யா ஸஸ்யோஜயந்தி தம்
நதேவா தண்டமாதாய ரக்ஷந்தி பசுபால பக்யம்”
யம்மி ரக்ஷிதி மிச்சந்தி புத்யா ஸஸ்யோஜயந்தி தம்
நதேவா தண்டமாதாய ரக்ஷந்தி பசுபால பக்யம்”
என்ன பகவான் நம்மைக் காப்பாத்தறான் காப்பாத்தறான் என்று சொன்னால் அந்த ஆடுமேய்ப்பவன்
ஆடுகளை எல்லாம் ஆடு மேய்த்துக்கொண்டு கம்புகளை எல்லாம் வைத்துக் கொண்டு போய்க் கொண்டு இருக்கிறானே அப்படி என்று நினைக்கிறீர்களா? அப்படி கிடையாது. “யம் ஹி ரஹிஸ்தி மிச்சந்தி புக்யா ஸம்போஜிதம் இதம்”
பகவான் யாரை ரக்ஷிக்கணும் என்று நினைக்கிறானோ அவனுடைய புத்தியில் ஒரு ப்ரேரணையைத் தருகிறான். நாம் எந்தக் கார்யம் செய்வதற்கும் புத்தியில் ஒரு ப்ரேரணை வந்தால்தானே செய்ய முடியும்? எந்த ஒரு ப்ரேரணை மனத்தில் வரவில்லை என்று சொன்னால் கார்யத்தைச் செய்ய முடியுமா? சாஸ்த்ரத்திலே எப்படி வேலை நடக்கிறது என்பதற்கு ஒரு ப்ரகரியை சொன்னார்கள். “ஜானாதி இச்சதி யததே தபக்ரியா” முதலில் அதைப்பற்றி ஓர் அறிவு வரணும். அப்புறம் செய்யணும் என்கிற ஒரு விருப்பம் வரணும் மனசுலே. அப்புறம் ஒரு முயற்சி எடுக்கணும். அப்புறம் கார்யம் நடக்கணும். முதலில் அந்த ‘ஜானாதி’ என்பது உண்டே, “இச்சதி” என்பது உண்டே அது யாரால் வருது என்று நினைக்கிறீர்கள்? அது அவனாலேதான் வரது. அது ஒண்ணு அந்த ப்ரேரணை என்ற ஒன்று அவனால் வரவில்லை என்று சொன்னால் நமக்கு என்ன ஆகிவிடும் என்பதை யோசனை கூடப் பண்ணமுடியாது. நமக்கு நல்ல ப்ரேரணையைக் கொடுக்கறதே, பகவான் நம்மைக் காப்பாத்தறது என்கிற வார்த்தைக்கு அர்த்தம். நாம் பகவானுடைய அனுக்ரஹத்தை, பெறுவோம் என்பதற்கு அர்த்தம். பகவான் நமக்குச் சரியான ப்ரேரணையைத் தரட்டும் என்பது அர்த்தம்.
அதனால் பகவானுடைய அனுக்ரஹம் இல்லாமல் நம்முடைய ஜீவனத்தை சரியான வழியில் கொண்டுபோக முடியவே முடியாது. அந்த பகவத் தத்வம் அத்யந்த முக்யமானது. அதற்கு அப்புறம் ஒரு பெரிய கேள்வி, அநேகம் பேருக்கு இருக்கு. நீங்கள் சொல்றேள் பகவான் என்று. ஆனால் பகவான்கள் எத்தனை? ஒன்றா, இரண்டா, பத்தா, ஆயிரமா தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் கோவில். ஒரு கோவிலில் சுப்ரமண்யர். ஒரு கோவிலில் கணபதி. இன்னொரு கோவிலில் சிவன். இன்னொரு கோவிலில் பெருமாள். இன்னொரு கோவிலில் தேவி. யாரை நம்புவது, யாரை விடுவது. யாரை ஆஸ்ரயிக்கணும். இந்தக் கோவிலுக்குப் போனால் அந்தக் கோவிலுக்குப் போகலை என்று அந்த பகவானுக்கு என்ன கோபம் வருமோ? நானோ பிள்ளையார் கோவிலுக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன். முருகனுக்கு என்ன கோபம் வருமோ தெரியாது. முருகன் கோவிலுக்குப் போய்க் கொண்டு இருக்கேன். சிவபெருமானுக்கு என்ன கோபம் வருமோ தெரியாது என்று அநேகம் பேருக்கு ஒரு கேள்வி. அதனால் மூலமாக அவர்கள் கேட்கும் கேள்வி உங்கள் ஸநாதன தர்மத்துலே பகவான் எத்தனை பேர்? என்பது. நான் சொன்னேன், எங்க ஸநாதன தர்மம் வேதங்களின் ப்ரதிவாதமானது என்பதை முதலில் சொன்னேனா இல்லையா? வேதத்தை ஜனனி என்றே ஆரம்பித்திருக்கிறோம். தாயார் மாதிரி என்று சொல்லி அந்த வேதமே நமக்கு இந்த ப்ரச்னைக்கு பதில் கொடுக்கிறது. என்ன பதில்
“எபியோ தேவஸ் ஸர்வ பூதேஷு மூட: ஸர்வம் வ்யாபி ஸர்வ பூதாம்”
பல பெயர்களைக் கொண்டவர்கள் ஆனாலும் அவர்கள் எல்லோருக்கும் கம்யமான தத்துவம் ஒன்றுதான். அதேதான் பகவத்பாத சங்கரர் சொல்கிறார். பெயர்கள் அநேகம். எத்தனை பெயர்கள் வேண்டுமானாலும் பகவானுக்கு நாம் சொல்ல முடியும். பகவானுக்கு ஸஹஸ்ரநாமங்கள் இருக்கின்றன. “அந்த” நாமங்களாலேயும் பகவானைப் பூஜை பண்ணலாம். சஹஸ்ரநாமங்கள் சொல்லி பகவானைப் பூஜை பண்ணுவதால் 1000 பகவான்கள் இருக்கிறார் என்று சொல்வது நியாயமா? நியாயம் இல்லையே! இந்த நாமங்கல் எல்லாம் ஒரே பகவானைக் குறிப்பதுதான் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ரூபங்கள் எல்லாம், இந்த உருவங்கள் எல்லாம் ஒரே பகவான் ஸ்வீகரிச்சது. அவருக்கு அது முடியும். நமக்கு அது முடியாது. முடிந்தால் நாமும் எத்தனையோ அவதாரங்கள் எடுக்கலாம் போல் இருக்கிறது. நமக்கு அது சாத்யம் இல்லையே! அவனுக்கு அது சாத்யம். பகவான் வந்து பகவத் கீதையிலே சொன்னார், “என்னுடைய மாயையை வசப்படுத்திக் கொண்டு நான் எவ்வளவு ரூபங்களை வேணுமானாலும் எடுத்துக் கொள்வேன்” என்று சொன்னார். அதனாலே பகவத் தத்வத்திலே என்றைக்கும் நமக்கு அவிஸ்வாசம் இருக்கக் கூடாது. இந்த பகவானுடைய ரூப பேதங்கள் எவ்வளவு இருந்தாலும் வஸ்து தத்வத்திலே மட்டும் பேதம் இல்லை. அது ஒரே பரமார்த்த வஸ்து. அது ஒரே பரமார்த்த தத்வம். இந்த ஸித்தாந்தம் நம் பரம்பரையாக பாரதீயர்களுக்கு வந்திருக்கக் கூடிய சித்தாந்தம்.
இந்த தத்வம் நாம் அநாதியாக அனுசரித்துக் கொண்டு வந்த தத்வம். இதை யாரோ இன்றைக்கோ நேற்றைக்கோ யாரோ கண்டுபிடித்தது என்பது கிடையாது. அனாதியாக நாம் இந்த தத்வத்தை அனுசரித்துக்கொண்டு வருகிறோம். இதன் அனுசாரமாகத்தான் நம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதனால் கணபதிக்கு பூஜை செய்தாலும் சிவனுக்கு பூஜை செய்தாலும் ஒரே பகவானுக்குத்தான் அது போகும். நமக்கு அந்த சமயத்துலே பேத புத்தி இருக்கக் கூடாது. அதைவிட இது பெரிசு இதைவிட அது பெரிசு என்கிற புத்தி மட்டும் இருக்கக் கூடாது என்பதுதான் இங்கே ஒரு நிபந்தனை. ஒரு நியமம். இது எல்லாம் ஒரே பகவானுடைய ஆகாரம் ஆனதனாலே எல்லாம் பூஜாரங்கம். நம்முடைய யோக்யதை, நம்முடைய ருசி, அதை அனுசரித்து எந்த மூர்த்தியை வேணுமானாலும் நாம் உபாசிக்கலாம். அதனால் ஸ்ரேயஸை அடையலாம் என்பது சாஸ்த்ர சித்தாந்தம். இந்த சித்தாந்தத்தை நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இருக்கவேண்டும். அதுபோல் ஆசரணம் செய்ய வேண்டும். நம்முடைய மனத்திலே அநேகமான ஒரு வீண் சமயம். அநேக சமயத்தை வீணாக நாம் போக்கிக் கொண்டே இருப்போம். ஒரு வேலையும் இருக்காது. வீண் பேச்சு பேசுவதோ அல்லது வ்யர்த்தமான கார்யங்களைச் செய்வதோ செய்துகொண்டு இருப்போம். அதே சமயத்துலே அந்த வீண் பேச்சு பேசாமல் பகவானுடைய நாமத்தையே உச்சரித்தால் அது பவித்ரமானது இல்லையா? அந்த சமயம் சார்த்தகம் ஆகும் அல்லவா? அதே போல் ப்ரதி தினமும் சிறிது நேரமாவது பகவத் ஸந்நிதியில் உட்கார்ந்து போனால் அது ஒரு பெரிய பவித்ரமான கார்யம் அல்லவா? பகவானுக்கு ஒரு பெரிய கைங்கர்யம் நடக்கிற போது நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நாம் அங்கே ஒரு சேவையைச் செய்தால் அது ஒரு பவித்ரமான கார்யம் அல்லவா? இந்த கர்தவ்ய ப்ரக்ஞை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். அது போல் நம்முடைய வாழ்க்கையை நடத்தவேண்டும். இந்த பாவம் எல்லா ஆஸ்திகர்களின் மனங்களிலும் உண்டாகட்டும். பகவத் தத்வம் விஷயத்தில் யாருக்கும் சம்சயம் இருக்கவே வேண்டாம். இந்த சராசர ஜெகனான பகவான் நமக்கு ஸர்வதா பார்ச்யனானவன். பூஜ்யனானவன். இத்தனை ஆயிரக்கணக்கான வருஷங்களிலும் நம் முன்னோர்கள் பகவானுக்கு இந்த மாதிரி விசாலமான மகத்தான தேவாலயங்களை நிர்மாணம் செய்து அந்த பகவானின் பூஜாதி கைங்கர்யங்கள் யதாசக்தியாக நடக்கட்டும் என்பதற்காக அநேக விதமான வ்யவஸ்தைகளைச் செய்தார்களே அவர்களுக்கு ஒண்ணும் புத்தி இல்லையா? ஒண்ணும் தெரியாமலே இவ்வளவு காரியங்களை நடத்தி விட்டார்களா? அப்படியேற்பட்ட ஓர் அவிவேகமான நிச்சயத்துக்கு நாம் வரலாமா? என்றைக்கும் வரக்கூடாது. மிக விவேகத்தோடு அந்தக் கார்யத்தை அவர்கள் செய்தார்கள். அதே வழியில் நாம் போகவேண்டும். இந்த பாவம் ப்ரதி ஒருத்தனுடைய மனத்திலும் வரட்டும். எல்லோரும் தங்களுடைய ஜீவனத்தை பவித்ரமாக நடத்தி பகவத் க்ருபைக்கு பாத்திரர்கள் ஆகட்டும் என்று நான் அந்த பகவானைப் ப்ரார்த்திக்கிறேன்.
ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்
தொகுப்பு சாரதா ரமணன்