Saturday, 22 February 2014

பண்டிதர் ஒருவர் தாம் எழுதிய சம்ஸ்க்ருத கட்டுரை ஒன்றை ஆசார்யாளிடம் சமர்ப்பித்தார். அதை ஆசார்யாள் முழுவதுமாகப் படித்து முடித்தார். அதில் சில விஷயங்களை மாற்ற வேண்டிய தேவை இருந்த போதிலும் ஆசார்யாள் அதைச் செய்ய முனையவில்லை. ஒரு சில நாள்களில் அந்தப் பண்டிதர் ஆசார்யாளைத் தரிசிக்க மீண்டும் வந்திருந்தார்.


பண்டிதர்: என் கட்டுரையை ஆசார்யாள் வாசித்தார்களா?

ஆசார்யாள்: ஆமாம். முழுவதும் படித்துப் பார்த்தேன். அதில் சில விஷய மாற்றங்கள் செய்யப்படவேண்டியுள்ளது. நான் அதைச் செய்யலாமா?

பண்டிதர்: (பதறிப்போனவராக) இந்த விஷயங்களில் ஆசார்யாளுக்கு முழு அதிகாரமும் இருக்கிறதே. என் இசைவை எதற்காக ஆசார்யாள் கேட்க வேண்டும்?

ஆசார்யாள்: இது உங்களுடைய படைப்பு. ஆகவே இது உங்களுடைய உடைமை ஆகிவிடுகிறது. இதில் நானாக ஏதேனும் மாற்றங்களைச் செய்ய எத்தனித்தேனாயின் அது பிறருடைய சொத்தை அபகரிப்பதற்குச் சமமாகி விடும். அப்படி ஒரு தவற்றைச் செய்ய எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் உங்களிடம் கேட்டுவிட்டுப் பிறகு மாற்றங்களைச் செய்யலாம் என்றிருந்தேன்.

No comments:

Post a Comment