உதாரணமாக, பணக்காரர்கள் தகுதியுடையவர்களுக்குத் தானம் செய்யும் மனப்பான்மையுடைய ஸாத்வீக குணமுடையவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இருந்தால் எவ்வளவு பணம் ஸம்பாதித்தாலும் அதனால் பயனில்லை. அதே போல நற்பண்புகள் நிறைந்த ஒருவன் பணிவுடனும் இருக்க வேண்டும். இல்லையென்றால் அது அஹங்காரத்தை வளர்த்து தேவையில்லாத பல முடிவுகளுக்கு இழுத்துச் செல்லும்.
சிலருக்கு அதிகாரமும், வலிமையும் இருக்கும். அவர்கள் அவற்றைத் தவறுதலாக பயன்படுத்தாமல் தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக பயன்படுத்த வேண்டும்.
ப்ராஹ்மணர்களுக்கு பொறுமைதான் பெரிய செல்வம். அவர்கள் ஒருபொழுதும் இந்தக் குணநலனைக் கைவிடக்கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் பொறுமையுடனும், பகுத்தறியும் திறத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு, மக்கள் தங்களிடம் இருக்கும் சிறந்த குணநலன்களை நல்ல கார்யங்கள் செய்வதற்கு உபயோகப்படுத்தினால், இந்த யுகம் க்ருதயுகம்போலாகும்.
அனைவரும் இதை நன்கு கருத்தில் கொண்டு, அவரவர் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
- தட்சிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்
No comments:
Post a Comment