ஸ்ரத்தை இல்லாமல் செய்யும் காரியம் பலிதம் ஆகாது
பகவத் பாத சங்கரர் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார். “முக்யௌ சாஸ்த்ரம் ப்ரமாணம் சகார்யா கார்ய வ்யவஸ்திதௌ” ஞாக்த்னா சாஸ்த்ர விதானோத்தம் கர்ம கர்து நிதார் ரஸி” என்று. அதாவது நாம் எதைச் செய்யணும், எதைச் செய்யக் கூடாது, எதைச் செய்தால் நமக்கு ஸ்ரேயஸ் உண்டாகும், எதைச் செய்தால் நமக்கு அஸ்ரேயஸ் உண்டாகும் என்கிற விஷயத்துலே சாஸ்த்ரம் ஒன்றுதான் ப்ரமாணம். “கார்ய கார்ய வ்யவ்ஸ்திதௌ சாஸ்த்ரம் ப்ரமாணம்” எதைச் செய்தால் நல்லதாகுமோ அதுதான் தர்மம். எதைச் செய்தால் கெடுதலோ அது அதர்மம். இந்த தர்மம், அதர்மம் என்கிற இரண்டு விஷயங்களைப் பற்றிச் சொல்லக்கூடிய, தீர்மானம் செய்யக்கூடிய உரிமை சாஸ்த்ரத்துக்குத்தான் உண்டு. இந்த விஷயத்தை பகவான் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறான். ஆசார்ய சங்கரரும் கூட இந்த தர்மா தர்மங்களைப் பற்றிச் சொல்கிற போது “நஹி வேதமேகம் ம்ருத்பா தர்மா தர்மயோஹோ அன்யக்கிஞ்சித் ப்ரமாணம் அஸ்தி” என்று சொன்னார். வேதத்தை விட்டு தர்மா தர்மங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இன்னொரு ப்ரமாணம் இல்லை என்று அவர் சொல்வார். சாஸ்த்ரம், வேதம் என்று ஒரே அர்த்தத்துலேதான் சொல்லுவோம்.
அப்பேர்ப்பட்ட சாஸ்த்ரோக்தமான கர்மாவை நாம் ஸ்ரத்தையோடு அனுஷ்டித்தால் நமக்கு ஸ்ரேயஸ் கிடைக்கும். நல்லது ஏற்படும். அந்த ஸ்ரத்தையே இல்லாவிட்டால் நாம் அங்கு சொல்லி இருக்கப்பட்ட பலத்தை அடைய முடியாது. அநேகம் பேர் “நீங்கள் சொல்கிற கார்யங்களை எல்லாம் செய்கிறோம் ஆனால் பலன் கிடைக்கவில்லை.” என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அங்கே காரணம் ஸ்ருத்தா லோபம். அதையும் பகவான் கீதையிலே சொல்லியிருக்கிறான்.
“அஸிரத்தையா உதன் தத்தம்
தபஸ்தத்தம் க்ருதஞ்சயதி
அதஸித்திர்யுத் பார்த்தா
நசதர் ப்ரேத்ய நூபிகா”
தபஸ்தத்தம் க்ருதஞ்சயதி
அதஸித்திர்யுத் பார்த்தா
நசதர் ப்ரேத்ய நூபிகா”
என்று ஸ்ரத்தை இல்லாமல் எதைச் செய்தாலும் அது உனக்குப் பலிக்காது. நீ, “இவ்வளவு ஹோமங்கள் செய்தேன். தானம் பண்ணினேன். தபஸு பண்ணினேன். யாகம் பண்ணினேன்.” என்று எவ்வளவு சொன்னாலும் ஸ்ரத்தை இல்லாமல் பண்ணினாய். ஸ்ரத்தை இல்லாமல் பண்ணினாய் என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்டால் ‘ஸ்ரத்தை’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். ஸ்ரத்தை என்ற வார்த்தைக்கு அர்த்தம், ஆசார்ய சங்கரரே சொல்லி இருக்கிறார். “சாஸ்த்ரத்திலேயும், குரு வாக்யத்திலேயும் அசஞ்சலமான விஸ்வாசம். அசைக்க முடியாத நம்பிக்கை. அதுதான் ஸ்ரத்தை. அதாவது சாஸ்த்ரத்திலே இப்படிச் சொல்லியிருக்கிறது அது அப்படித்தான் நடக்கும் என்கிற தீர்மானம். ஸ்ரத்தை இல்லை என்பதற்கு அர்த்தம் அந்தத் தீர்மானம் இல்லை என்று அர்த்தம். என்னமோ அப்படி பண்ண வேண்டுமாம். அப்படி பண்ணினால் அப்படி ஆகுமாம் அவர் சொல்கிறார் என்று சொல்வோமே தவிர, இப்படிச் செய்தால் இப்படித்தான் நடக்கும் என்கிற தீர்மானம் கிடையாது. பின்பு நாம் செய்வதை கேவலம் ஓர் ஆடம்பரத்துக்கு பத்துபேர் பார்க்க வேண்டும் என்பதற்கு செய்கிறோமா? இல்லை இன்னொருத்தன் பார்க்கணும் என்பது எனக்குக் கிடையாது. ஈஸ்வரப் ப்ரீதிக்காக நான் செய்கிறேன் என்று செய்யணுமா! என்று கேட்டால் நம்முடைய மனசிலே இருக்க வேண்டியது இந்தக் கார்யத்தை நான் செய்தால் எனக்கு க்ஷேமம். இதை இன்னொருத்தன் என்னை ப்ரஸம்ஸை செய்யணும் என்பதற்காக நான் செய்யவில்லை. என்னுடைய கர்தவ்யம் என்பதற்காக நான் செய்கிறேன் என்று நாம் செய்தோமானால் அவசியம் நமக்கு அங்கே பலம் கிடைக்கத்தான் செய்யும். அநேகம் பேருக்கு இந்தக் காலத்துலே ஒரு பெரிய ப்ரச்னை. என்னவோ யாகம், ஹோமம் என்று சொல்லி அநேக த்ரவியங்களை எல்லாம் நெருப்பிலே போட்டு விடுகிறார்கள். அதைக் கொண்டு யாராவது ஏழைகளுக்குக் கொடுத்தாலாவது எவ்வளவு நல்லது ஆகும்? எல்லாவற்றையும் விட்டுவிட்டு இவ்வளவு பதார்த்தங்கள் எல்லாம் கொண்டு போய் நெருப்பிலே போட்டுவிட்டால் யாருக்கு ப்ரயோஜனம்? என்று சிலர் சாஸ்த்ரத்தினுடைய மர்மம் தெரியாதவர்களுக்கு ஒரு ப்ரச்னை. சாஸ்த்ரம் என்ன சொல்கிறது என்று கேட்டால் நாம் செய்கிற காரியங்களுக்கு வரக்கூடிய பலம் ப்ரத்யக்ஷமாகத் தெரியணும் என்று இல்லை. அப்ரத்யக்ஷமாக வரும். “அது ஏன்? ப்ரத்யக்ஷமாக வரும் என்று தெரியவில்லை. அப்ரத்யக்ஷமாக வரும் என்று சொல்கிறீர்கள்? சரியாகப் புரியும்படி சொல்லுங்கள்” என்று அநேகம் பேர் கேட்கிறார்கள். உங்களுக்கு லௌகீகத்திலேயே நாம் எங்கேயோ ஒரு ஸ்விட்சு ஆன் பண்ணினால் அங்கே எல்லாம் தீபங்கள் எரியறது. எப்படி எரியறது? ஸ்விட்சு இருப்பது எங்கேயோ! தீபம் இருப்பது எங்கேயோ! எவ்வளவு ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்துலே ஒருத்தன் பேசறான். இங்கே ஒருத்தன் ஸ்விட்சு ஆன் பண்ணினால் அவனுடைய குரல் கேட்கிறதே எப்படி கேட்கிறது? ப்ரத்யக்ஷமாக, லௌகீகமாகப் பார்த்தால் அந்த ஆசாமி நம் கண் எதிரில் இல்லை. அது எப்படி கேட்க முடியும்?
பழைய காலத்து ஆசாமிகள் சொல்லிக் கொண்டு இருந்தார்களாம், இந்த ரேடியோ மாதிரி சாதனங்கள் வந்த புதுசுலே அது பேசறபோது “ஏய்! அதுக்குள்ளே எவனோ உட்கார்ந்து பேசறாண்டா! இல்லாவிடில் எங்கோ பேசிக் கொண்டிருந்தால் இங்கே எப்படி கேட்க முடியும்? உலகத்துலே எப்படி இருக்கிறது? ஒருவன் நம் எதிரில் பேசினால் நமக்கு அவன் சொல்வது கேட்கும். நீ ஒரு குரல் கேட்கிறது என்றால் உள்ளே எவனோ உட்கார்ந்து இருக்கணும்” என்றானாம். இல்லையப்பா! அவன் இங்கு உட்கார வேண்டியது இல்லை. அது எப்படி கேட்கமுடியும்? கேட்க முடியும். ஸம்ஸ்க்ருதத்திலே ஒரு வசனம் “நவிதி த்ருஷ்டி அனுபனன்னன்
நாம் “ப்ரத்யக்ஷமாக இருக்கிற விஷயத்துலே முடியாது என்று சொல்வதற்கு அவகாசமே இல்லை. அது எப்படி இருக்கும் என்று கேட்டால் ப்ரத்யக்ஷமாக இருக்கும் விஷயத்துலே முடியாது என்று சொன்னால் எவ்வளவு அவிவேகம் என்று சொன்னால் அதற்கு ஓர் உதாரணம் சொல்லலாம். ஒருத்தர் வந்து தன்னுடைய ஜாதகத்தை ஒரு ஜோஸ்யரிடம் கொண்டு போனார். கொண்டு போய் அந்த ஜோஸ்யரிடம் “எனக்கு பவிஷ்யம் சொல்லுங்கோ. என் வாழ்க்கை இனிமேல் எப்படி இருக்கும்?” என்று கேட்டாராம். அப்போது அந்த ஜோஸ்யர் கேட்டாராம், “இது உன் ஜாதகம் தானே?” என்று அதற்கு அவன் “ஆமாம் என் ஜாதகம்தான்” “அப்போது இந்த ஜாதகத்துப்படி நீ போய் ஐந்து வருஷம் ஆகி இருக்க வேண்டுமே!” என்றாராம். “இல்லையப்பா நான் போனால் எப்படி உயிரோடுதானே இருக்கிறேன். உங்கள் எதிரிலேயே வந்து நிற்கிறேனே. நான் போய் 5 வருஷம் ஆகிவிட்டது என்று சொல்கிறீர்கள்?” “நீ சொல்வதை நான் நம்ப முடியாது. நீ போய் 5 வருஷம் ஆகி விட்டது” என்றாராம். இனி அந்த ஜோஸ்யருக்கு நாம் என்ன பதில் சொல்வது? உயிரோடு ப்ரத்யக்ஷமாக எதிரில் வந்து நின்றாலும் “நீ உயிரோடு இருக்கிறாய் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்” என்று அவர் சொன்னார். நாம் என்ன செய்வது? “நவி த்ருஷ்டேன அனு பன்னன் நாம” அதே போல் லௌகீகமான விஷயங்களில் ஆயிரக்கணக்கான மைல் தூரத்திலே இருக்கிறவனுடைய குரல் இங்கே உனக்கு கேட்கிறது என்கிறபோது எதனால் கேட்கிறது என்று சொன்னால் அங்கே ஒரு க்ரமம் இருக்கிறது. அந்த க்ரமத்தின்படி செய்தால் அது கேட்கும் என்று எப்படி சொல்லுகிறீர்களோ. சாஸ்த்ரமும் அதே போல் சொல்லுகிறது. என்ன சொல்கிறது?
“அக்னௌ ப்ராஸ்தா ஹுதி ஸம்ய ஆதித்யமுபதிய்சதே
ஆதித்யாத்ய தயாயதே வ்ருஷ்டி: வ்ருஷ்டேரன்னன் ததஸ்ப்ரஜா:”
என்று சொல்கிறது.
“அக்னௌ ஸ்ம்யர் ப்ராஸ்தாஆஹுத் ஆதித்யம் உபதிஷ்டதி”
ஆதித்யாத்ய தயாயதே வ்ருஷ்டி: வ்ருஷ்டேரன்னன் ததஸ்ப்ரஜா:”
என்று சொல்கிறது.
“அக்னௌ ஸ்ம்யர் ப்ராஸ்தாஆஹுத் ஆதித்யம் உபதிஷ்டதி”
‘ஸ்ம்யத்’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? அக்னியில் விதி விதானத்தோடு நாம் போட்ட ஆஹுதி ஆதித்யனுக்கு ஸுர்யனுக்குப் போய்ச் சேரும். சூர்யனால் மழை ஏற்படும். மழையினால் நம்முடைய ஆகாரம் கிடைக்கும். ஆஹாசம் இருந்தால் மனுஷன் ஜீவிக்க முடியும். நான் அதை ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொன்னால் அப்போது அதுவும் நீ ஒத்துக்கொள்ள முடியாது. அவ்வளவு தூரத்துலே பேசுகிறவன் குரல் இங்கு ரேடியோவில் கேட்பதையும் நீ ஒத்துக்கொள்ள முடியாது என்று சொல்லலாமே. இதை மட்டும் ஒத்துக்கொள்ளும்போது அதை ஏன் ஒத்துக்கொள்ளக்கூடாது? இது இன்றைக்குக் கண்டுபிடித்தது. ஆனால் இதுவோ எத்தனையோ ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பே சொல்லி வைத்தது.
எப்போதுமே மனுஷன் ஒரு யுக்திக்கு ஒரு ப்ரமாணத்துக்கு கட்டுப்படவேண்டும். “எனக்கு எந்தவிதமான யுக்தியும் இல்லை. ப்ரமாணமும் இல்லை. நான் எனக்குத் தோன்றியபடி பேசிக் கொண்டிருப்பேன்.” என்று சொன்னால், ஆசார்ய சங்கரர் அப்பேர்ப்பட்டவர்களுக்கும் பதில் சொல்லியிருக்கிறார். அந்த மாதிரி நாம் சொல்வதாக இருந்தால் “யஸ்மை யஸ்மை யுத்யத்ரோஜதே தத் ஸர்வமதி ப்ரமாணம் த்ஸ்யாத்” என்றார். அப்படி சொல்வதை எல்லாம் ஒத்துக் கொள்வதாக இருந்தால் அவனவனுக்குத் தோன்றுவதை எல்லாம் அவன் சொல்லுவான். அதெல்லாம்சரி என்று நாம் சொல்லவேண்டி வரும். வரட்டுமே! எல்லோரும் சொல்வதை சரி என்போம். ஆ! எல்லோரும் சொல்வதை சரி என்று சொல்ல ஆரம்பித்தால் ஒருத்தன் சாயங்காலம் ஆனவுடனே உபநயனம் ஆனவன் ஸந்த்யாவந்தனம் பண்ணனும் என்று சொல்றான். இன்னொருத்தன் கிடையாது, சாயங்காலம் ஆனவுடனே விளையாடுவதற்குப் போகணும் என்று சொல்கிறான். இன்னொருவன் அதுவும் கிடையாது. சினிமாவுக்கு போகணும் என்று சொல்கிறான். இன்னொருவன் அதுவும் வேண்டாம் சாயங்காலம் ஆனவுடனே “க்ளப்”புக்குப் போகணும் என்று சொல்கிறான். இவர்கள் எல்லாருடைய பேச்சும் ப்ரமாணம் என்று நாம் சொல்வதாக இருந்தால் இனி தர்மம் என்பதும் இல்லை. சாஸ்த்ரம் என்பதும் இல்லை. எதுவும் இல்லை. பசுக்கள் மாதிரி. ப்ராணிகள் மாதிரி நம்முடைய வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கை அந்த சதுஷ்பாத் ப்ராணிகள் மாதிரிதான் ஆகும். அப்படி ஆகக்கூடாது அல்லவா? இந்த மனுஷன் என்பது மனுஷ்ய சரீரம் என்பது. மனுஷ்ய ஜென்மம் என்பது இது ரொம்ப உத்தமமானது. “ஜெந்துனான் நர ஜென்ம துர்லபம்” என்று சாஸ்த்ரத்துலே மனுஷ்ய ஜென்மத்தை அவ்வளவு உயர்ந்ததாகச் சொல்லி இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாம் அவ்வளவு அவிவேகத்தோடு பேசுவதாக இருந்தால் அது நமக்கு நியாயமா? கொஞ்சமும் நியாயமில்லை.
ஆகையால் நம்முடைய கண்ணுக்குத் தெரியாத ரீதியிலே ஒரு சங்கதி நடந்துகொண்டு இருக்கிறது என்பது லௌகீகத்துலேயும் ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சாஸ்த்ரீயமாகவும் ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் அக்னியிலே இவ்வளவெல்லாம் பதார்த்தங்களை வீணாக்கட்டும் என்று யாருமே நினைக்கக் கூடாது. நாம் இன்றைக்கு ஓர் அளவுக்கு த்ரவியத்தை அக்னியில் விதி விதான புரஸ்தரமாக ஸமர்ப்பித்தால் அது பத்து மடங்கு அதிகமாக நமக்குக் கிடைக்கிறது. ஒரு மழை வரணும் என்று சொன்னால் அது நம்மால் சாத்யமா? (லௌகீகமான காரணங்களால்) சாத்யமில்லை. ஆனால் சாஸ்த்ரத்திலேயே சொல்லப்பட்ட இந்த மாதிரி மார்க்கத்தினாலே சாத்யம். “ஆதித்யாத்யாயதே வ்ருஷ்டி: வ்ருஷ்டோன்னன் தத ப்ராஜ: என்று எந்த மார்க்கம் சாஸ்த்ரத்திலே சொல்லி இருக்கிறதோ அந்த மார்க்கத்தை அனுசரித்தால்தான் சாத்யம். ஆகையால் நாம் செய்யக்கூடிய இந்த பவித்ரமான கார்யங்கள் உலகத்துக்கு க்ஷேமகரமா இல்லையா? என்கிற ப்ரச்னைக்கு இது லோகக்ஷேமகரமான கார்யங்கள் என்று நாம் தீர்மானமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம் இப்பேர்ப்பட்ட கார்யங்களை நாம் இன்றைக்குப் புதிதாக ஆரம்பித்திருந்தால் ஏதோ இவர் தனக்குத் தோன்றியபடி செய்கிறார் என்று சொல்லலாம். நாம்
“சகயக்ஞா ப்ரஜா ஸ்ருத்வா புரோ வாசப் ப்ரஜாபதி:
ஆனேன ப்ரஷவித்யத்வம் ஏவிவோ
ஸ்விஷ்ட காம து: ஏவான் பாவயதேனே ந தேதேவா பாவயந்துவ:”
ஆனேன ப்ரஷவித்யத்வம் ஏவிவோ
ஸ்விஷ்ட காம து: ஏவான் பாவயதேனே ந தேதேவா பாவயந்துவ:”
பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய ஸ்பரம் அவாப்த்யத
என்கிற வார்த்தையை ரொம்பப் ப்ரமாணமாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம். என்ன அதற்கு அர்த்தம்? ஸ்ருஷ்டி கர்த்தாவான பரமாத்மா ஸ்ருஷ்ட்யாரம்பத்திலேயே ப்ரஜா ஸ்ருஷ்டியைச் செய்து அவர்களுக்கு இந்த தர்மங்களை உபதேசித்து நீங்கள் தர்மங்களை ஒழுங்காக அனுஷ்டியுங்கள். இதனால் தேவதைகள் ஸந்துஷ்டர்களாக ஆகிவிடுவார்கள். திரும்ப உங்களுக்கு அவர்கள் ஸகாலத்துக்கு மழை இத்யாதிகளைத் தருவார்கள். இப்படி உங்களால் அவர்கள், அவர்களால் நீங்கள் என்று பரஸ்பரம் ப்ரயோஜனத்தை அடைந்து ஸ்ரேயஸோடு இருங்கள் என்று பகவானுடைய கட்டளை ஆரம்பத்திலேயே. ஸ்ருஷ்டி ஆரம்பத்திலேயே. இதை நாம் அனுசரிக்காமல் போனால் என்ன ஆகும் என்பதையும் அங்கேயே பகவான் சொல்லியிருக்கிறான். குஷ்டான் போகான் விவோதேவா: தாஸ்யந்தே யக்ஞ பாவிதா: தைர்த்யத்தான் அப்ரதாயைத்ய: யோகுந்தே ஸ்தேன ஏவத:”
உங்களுக்கு தேவதைகள் இவ்வளவு உபகாரம் செய்கிறார்கள். ஸகாலத்துக்கு வ்ருஷ்ட்யாதிகள் வரவேண்டுமானால் அந்த தேவதா அனுக்ரஹம்தான். தேவதைகளால் இவ்வளவு உபகாரத்தை அடைந்து திரும்ப அவர்களுக்கு நீங்கள் இந்த ஹவிர்பாகங்களை சரியாகக் கொடுக்கவில்லை என்று சொன்னால் அது ரொம்பவும் தப்பிதம். எப்பேர்ப்பட்ட தப்பிதம் என்று சொன்னால் அவர்கள் உங்களுக்கு இவ்வளவு சௌகர்யங்கள் கொடுத்ததனால் அவர்களுக்குத் திரும்ப நீங்கள் அவிர்பாகங்களைக் கொடுக்காமல் நீங்கள் அனுபவிப்பதாக இருந்தால் உங்களை “ஸ்தேன ஏவச:” திருடன் என்று சொல்ல வேண்டி வரும். அவர்கள் நமக்கு இவ்வளவு அனுக்ரஹம் பண்ணும்போது திரும்ப தேவதைகளை நாம் ஆராதிக்கா விட்டால் அது பெரிய பாபம்.
சாஸ்த்ரத்திலேயும் கூட எவன் மற்றவனுக்கும் உபகாரம் செய்யாமல் ஈஸ்வரனுக்கும் எதையும் சமர்ப்பிக்காமல், கேவலம் தானே சாப்பிடுவானோ அது தன்னுடைய உதர போஷணம்தான் வேறு எதுவும் கிடையாது என்று எவன் நினைப்பானோ அப்பேர்ப்பட்டவன் சாதம் சாப்பிடுகிறான் என்று அல்ல. பாபத்தைச் சாப்பிடுகிறான் என்று அர்த்தம்.
“மோகம் அன்னம் ஹிந்த தேக ப்ரமததா:
சத்யம் ரவீனி வபதி சதஸ்யா நார்ய மணம் புஷ்யதி
நோசகாயம் விவலா போ வவதி கேவலாதி”
“நஅர்ய மணம் புஷ்யதி நோசகாயம்”
சத்யம் ரவீனி வபதி சதஸ்யா நார்ய மணம் புஷ்யதி
நோசகாயம் விவலா போ வவதி கேவலாதி”
“நஅர்ய மணம் புஷ்யதி நோசகாயம்”
அப்பேர்ப்பட்டவனால் சமாஜத்துக்கும் உபகாரம் இல்லை. தேவதா சேவையும் நடக்கவில்லை. அப்போது அவன் என்ன சாப்பிடுகிறான்? “கேவல அதி” கேவலம் தன்னுடைய உதரபோஷணமே எவன் செய்து கொண்டு இருக்கிறானோ அவன் கேவலம் பாபத்தை அவன் சாப்பிடுகிறான். சாதத்தை இல்லை. அப்படி இருக்கும்போது நாம் இந்த பவித்ரமான கார்யங்களை தேவதாராதன ரூபமான கார்யங்களை அவ்வப்போது ஆங்காங்கே அனுஷ்டானம் செய்தால்தான் உலகத்துக்கும் க்ஷேமம். மக்களுக்கும் க்ஷேமம். இந்த ஒரு பாரம்பர்யத்தை நாம் அதி ப்ராசீன காலமாக அனுசரித்துக் கொண்டு வருகிறோம்.
எவ்வளவு புராணங்களைப் பார்த்தாலும் இதிகாசங்களைப் பார்த்தாலும் இந்த விஷயங்களை நாம் அங்கே தெரிந்து கொள்ளலாம். இராமாயண காலத்திலே எத்தனை மகான்கள் யக்ஞ யாகாதி கர்மாக்களைச் செய்து கொண்டிருந்தார்கள்? எத்தனை பவித்ரமான கார்யங்கள் நடந்து கொண்டிருந்தன? எத்தனை இடங்களில் தான தர்மங்கள் நடந்து கொண்டிருந்தன என்பதைப் பார்த்தால் மிக ஆச்சர்யமாக இருக்கும். அதேபோல் மஹாபாரதத்துலே எவ்வளவு பவித்ரமான கார்யங்கள் நடந்து கொண்டிருந்தன என்பதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். மஹாபாரதத்துலே துரியோதனன் அவன் ஒரு விதமான மனுஷன். மொத்தத்திலே பார்த்தால் அவன் துஷ்டன்தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் பஞ்சபாண்டவர்களை ஆரண்ய வாசத்துக்கு அனுப்பிய சமயத்துலே அவன் ஜனங்களுடைய ப்ரீதியை சம்பாதிக்கணும் என்பதற்காகவும் ஈஸ்வர ப்ரீதிக்காகவும் எத்தனையோ தான தர்மங்களைப் பண்ணிக்கொண்டு இருந்தான். எத்தனையோ யக்ஞ யாகாதிகளை நடத்திக் கொண்டிருந்தான் என்று இருக்கிறது. “கிராதார்ஜுனியம்” என்று ஒரு காவியம். அந்தக் காவ்யத்துலே தர்மராஜன் ஆரண்யத்துலேயே இருந்து அங்கேயே இருக்கக்கூடிய ஒரு ரொம்ப புத்திசாலியான ஒருத்தனை காட்டில் இருக்கச் கூடிய ஒரு வேடனை துரியோதனன் ராஜ்யம் எப்படி நடக்கிறது என்று நீ பார்த்துவிட்டு வா என்று சொல்லி அனுப்பினார். அவன் துரியோதனனுடைய ராஜ்யத்துலே எல்லா இடத்திலேயும் போய்ப் பார்த்திருக்கிறான். பார்த்து, இவரிடம் (தர்மராஜனிடம்) முழுச் செய்தியையும் சொல்லிக் கொண்டு வந்தான். அவன் சொல்கிறான் : அவன் ஜனங்கள் எல்லோரும் உங்களை மறந்துடணும் என்பதற்காக எவ்வளவோ பெரிய பெரிய கார்யங்களைச் செய்து கொண்டிருக்கிறான். இனி ஜனங்கள் யாருக்கும் தர்மராஜன் பெயர் ஞாபகத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக. எதனால்? நாம் இப்பேர்ப்பட்ட தான தர்மங்களைச் செய்தால் ஸமாஜத்துக்கும் நல்லது. தேசத்துக்கும் நல்லது என்பதற்காக அப்பேர்ப்பட்ட கார்யங்களை அவன் செய்து கொண்டிருந்தான். இனி இராமருடைய காலத்துலே எவ்வளவு மகாகார்யங்கள் நடந்தது என்பதை இராமாயணம் பார்த்தால் தெரிகிறது. இப்படி ஒரு பாரம்பர்யம் நம்முடைய இதே பவித்ரமான பாரததேசத்திலே அநாதி காலமாக வந்து கொண்டு இருக்கிறது.
ஆதிசங்கர பகவத் பாதாள் நமக்கு அநேக உபதேசங்களைக் கொடுத்தார். அந்த உபதேசங்களில் அவர் ஒரிரண்டு உபதேசங்களைச் சொன்னார். வேதோக்தமான கர்மாக்களை ஸ்ரத்தையோடு செய்யுங்கள். அதனால் ஈஸ்வரனை ஸந்த்ருப்தி படுத்துங்கள். இரண்டு உபதேசங்கள்:
“தது திதம் கர்மம் ஸ்வனுஷ்டீயதாம்
தேந ஏ ஈசஸ்ய விதீயதாம் அபசிதி:”
தேந ஏ ஈசஸ்ய விதீயதாம் அபசிதி:”
“ததுதிதம்” வேதத்தில் சொல்லப்பட்ட கர்மாவை ஸுஅனுஷ்டிதாம் ஸ்ரத்தையோடு செய்யுங்கள். அதனால்தான் ஈஸ்வரனை ஸந்துஷ்டனாக்க முடியும். ஏனஈசஸ்ச விதீயதாம் அபசிதி: “அபஸ்சிதி:” என்ற வார்த்தைக்கு பூஜை என்று அர்த்தம். அதனால் ஈஸ்வரனை பூஜியுங்கள். ஈஸ்வரனை ஸந்த்ருப்தி படுத்துங்கள். நான் எதற்கு சொல்ல வருகிறேன், எந்த ஒரு பாரம்பர்யம் ஸ்ருஷ்ட்யாதியிலிருந்து வந்திருக்கிறதோ எந்த தர்மம் நம்முடைய குருவான ஆதிசங்கரரும் சொல்லியிருக்கிறாரோ அந்த தர்மங்களை மறக்காமல் அனுஷ்டிக்கணும் என்று சொல்லி இருக்கிறார் என்பதைச் சொல்கிறேன். அநேகம் பேருக்கு ஆதிசங்கரர், அவரா அவர் அத்வைதம் ஒண்ணுமில்லையே என்பார்கள் அத்தைவதம் ஒண்ணுமில்லையே என்பது எப்போது? எவனுக்கு அந்த அத்வைத ஆத்ம த்ருஷ்டி வந்திருக்கிறதோ அவனுக்கு ஒன்றுமில்லை.
“யஸ்யதஸ்ய ஸர்வம் த்மைவாபுதத் தேனகம்
பஸ்யேத்கேனகம் ஜிக்ரேத் கேனகம் விஜானியாத்
பஸ்யேத்கேனகம் ஜிக்ரேத் கேனகம் விஜானியாத்
எவனுக்கு ஸர்வத்ர ஆத்மதர்சனம் என்பது இருக்கிறதோ அவன் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை. அடையவேண்டியதும் ஒன்றுமில்லை. அவன் கேவலம் ஆத்மா இராமனாக இருக்கலாம். ஆனால் நம்முடைய நிலைமை அப்படி இருக்கிறதா? அப்படி இல்லையே. நாம் மீதி வ்யவகாரம் எல்லாம் பண்ணிக் கொண்டு இருக்கிறோம். தர்ம அனுஷ்டானம் வரும்போது அத்வைதம் என்று சொல்லி விடுகிறோம். இது எவ்வளவு ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.
ஒருவர் சொன்னார் “பகவான் பகவத் கீதையிலே ரொம்ப ஸாரபூதமாக கடைசியிலே இரண்டு விஷயங்களைச் சொல்லி இருக்கிறான்” என்று பெரியவர்கள் மூலமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை என் ஜீவிதத்துலே அனுஷ்டானத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்று பார்க்கிறேன். பாதியைக் கொண்டு வந்திருக்கிறேன். இனி பாதியைக் கொண்டு வரணும் என்று சொன்னார். என்னப்பா என்றேன். “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜா” என்று இருக்கிறது. இதில் இரண்டு விஷயம். எல்லா தர்மங்களையும் விட்டு விட்டு என்னைச் சரணடைய வேண்டும். இரண்டு விஷயங்கள் இருக்கிறது. அதில் முதல் விஷயத்தை ரொம்ப அழகாகச் செய்துவிட்டேன். இரண்டாவது விஷயம் அது சாவகாசமாகச் செய்ய வேண்டியிருக்கிறது. “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய” எல்லாவற்றையும் விட்டாச்சு. இந்த மாதிரி நாம் சொன்னால் இது நமக்கு நியாயமாகுமோ? இது கேவலம் நம் மனசில் ஸ்ரத்தை இல்லை. நாஸ்திக்யம் இருக்கிறது. ஆலஸ்யம் இருக்கிறது. ஆலஸ்யம் என்று ஸம்ஸ்க்ருதத்தில் சொல்கிற வார்த்தைக்கு சோம்பல் என்று அர்த்தம். நம்முடைய அந்த ஆலஸ்யம் அஸிரத்தை, நாஸ்திக்யம் அதுதான் இப்பேர்ப்பட்ட வார்த்தைகளை நம் வாயால் சொல்ல வைக்கிறது. அது இல்லாவிட்டால் நாம் இந்த மாதிரி வார்த்தைகளைப் பேச மாட்டோம். நாம் ப்ரதி ஒருத்தனும் கூட இப்பேர்ப்பட்ட கார்யங்களில் ரொம்ப ஸ்ரத்தையோடும் ரொம்ப பக்தியோடும் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும். இங்கே திரும்ப ஒரு ப்ரச்னை அநேகம் பேருக்கு. “ஓ! நீங்கள் சொல்கிறீர்கள், இப்படி ஒரு பெரிய யாகம் பண்ணினால்தான் அவன்தான் தர்மிஷ்டன்.” என்கிறீர்கள். எங்களுக்கெல்லாம் அந்த மாதிரி யாகங்களைப் பண்ண முடியாது. நாங்கள் சாதாரணமானவர்கள். அப்போது எங்களுக்கு இதில் அவகாசமே இல்லை. அப்படி சொல்லவே சொல்லக் கூடாது.
சாஸ்திரத்திலே சொன்னார்கள், “என்ன ஓய்! பணக்காரன்தான் தர்மம் பண்ணலாம். இன்னொருத்தன் பண்ணக்கூடாது என்று உண்டோ” அப்படி எங்கேயும் இல்லை.
“அர்த்தானு ஸ்ருயதி விஜஹி மோ தர்ம
மர்த்தை ஹி சாத்யம் காயக் க்லேசை
கடிகடி இத சாதனியோ நதர்ம:”
மர்த்தை ஹி சாத்யம் காயக் க்லேசை
கடிகடி இத சாதனியோ நதர்ம:”
பணம் இல்லை என்று சொன்னால் அதனால் தர்மத்தைச் செய்ய முடியவில்லை என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாமா? ஒருத்தர் பெரியவர், இந்த மாதிரி ஒரு நல்ல கார்யம் பண்ணுகிறார் என்று சொன்னால் அதைப் பண்ணுவதற்கு நமக்கு சக்தி இல்லாவிட்டாலும் அது நடக்கக் கூடிய இடத்துக்கு வந்து தர்சனம் பண்ணினாலே ஒரு தர்மம் அல்லவா? அதுவே ஒரு புண்ணியம் அல்லவா? அல்ல என்று யார் சொன்னார்கள்? இந்த மாதிரி கார்யங்களில் ஒரு நல்ல கார்யத்திலே எத்தனை பேருக்குப் புண்ணியம் இருக்கிறது என்று சொன்னால் அதைச் செய்கிறவனுக்கும் அவனால் செய்ய வைக்கிறவனுக்கும் அதை நீ செய்யணும் என்று தீண்டினவனுக்கும் அதற்கு இடைஞ்சல் பண்ணாமல் இருக்கிறவனுக்கும் அவனுக்கும் அதில் ஒரு துளி பங்கு உண்டு.. அப்படி இருக்கும்போது நாம் நல்ல கார்யங்களைச் செய்யணும். செய்வதற்கு நமக்கு சக்தி இல்லை என்று சொன்னால் அந்த மாதிரி பவித்ரமான கார்யங்கள் எங்கு நடக்கிறதோ அங்கே போய் தர்சிக்க வேண்டும். நமக்கு சரீரத்தினாலே எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு செய்தாலும் போதும். வேறு ஒன்றும் வேண்டாம். உங்களுக்கு என்னால் ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள். நான் செய்கிறேன். என்னிடம் பணம் இல்லை. ஆனால் வேறு ஏதாவது உதவி செய்வதானால் செய்கிறேன் என்று சொல்லி செய்தோமானால் அதுவும் ஒரு பெரிய தர்மம் அல்லவா? அப்படி இருக்கும்போது நாம் யாருமே நமக்கு தர்மானுஷ்டானத்துக்கு அவகாசம் இல்லை என்று மட்டும் நினைத்துக் கொள்ளக் கூடாது. ப்ரதி ஒருத்தனுக்கும் இருக்கிறது. அப்பேர்ப்பட்ட சாரீரகமான சக்தி இல்லாதவனுடைய பரிஸ்திதி என்ன என்று சொன்னால் அவனுக்கும் இருக்கிறது. எனக்கு ஓடி ஆடுவதற்கு சக்தி இல்லை. ரொம்ப வயசாகி விட்டது. இப்போது நாம் ஒன்றும் செய்யக்கூடிய நிலமையிலே இல்லை என்று சொன்னால் நீங்கள் ஒண்ணும் செய்ய வேண்டாமப்பா! இருக்கிற இடத்திலேயே பகவத் தியானம் பண்ணுங்கள். அதுவே உங்களுக்குப் பெரிய தர்மம். அது இல்லை என்று யார் சொன்னார்கள்? ஆகமட்டும் மொத்தத்துலே ப்ரதி ஒருத்தனுக்கும் தர்மானுஷ்டானத்துக்கு அவகாசம் இருக்கவே இருக்கிறது. ஆகையால் நாம் சொன்ன உபன்யாஸத்தின் ஸாராம்ஸத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் தர்மாதர்மங்களைப் பற்றி சாஸ்த்ரம்தான் ப்ரமாணமாகச் சொல்ல முடியும். சாஸ்த்ரத்துலே நாம் எதைச் செய்யணும் என்று சொல்லியிருக்கிறதோ அது தர்மம். அப்பேர்ப்பட்ட தர்மத்தை நாம் ஸ்ரத்தையோடு அனுஷ்டிக்க வேண்டும். நாம் இந்த மாதிரி யாகங்களைச் செய்வதில் த்ரவியங்களை வீணாக்குகிறோம் என்று நினைக்கக் கூடாது. அதனால் பத்து மடங்கு உபயோகம் திரும்ப நாம் அடைகிறோம். இந்த விஷயத்துலே யாருக்கும் எப்பேர்ப்பட்ட சம்சயத்துக்கும் அவகாசம் இருக்க வேண்டிய தேவை இல்லை. இது ஆரம்பத்திலிருந்தும் நாம் அனுஷ்டிக்கக் கூடிய பாரம்பர்யம். இதிகாச புராணங்களெல்லாம் இந்த விஷயத்தை நமக்குக் காட்டுகிறது. ஆதிசங்கர பகவத்பாதாளும் இந்த விஷயத்தை நமக்கு ப்ரபோதம் செய்தார். ஆகையால் ப்ரதி ஒருத்தனும் இந்த தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். அவனவனுடைய சக்தியை அனுசரித்து எல்லோரும் தர்மத்தை அனுஷ்டிப்பதற்கு அவகாசம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதை நாம் எல்லோரும் மனத்தில் வைத்துக் கொண்டு நம்முடைய ஜீவிதத்துலே சத் விஷயங்களை சிந்தனை செய்து சத் கர்மாக்களை அனுஷ்டானம் செய்து இந்த ஜென்மாவை ஸார்த்தகம் ஆக்கிக் கொள்ள வேண்டியது நம்முடைய கர்தவ்யம். சாஸ்த்ரத்திலே பகவானை ஆராதனம் செய்யணும் என்கிற விஷயத்தைச் சொல்லும்போது அந்த பகவானுடைய ஸ்த்ரீ ரூபமான அந்த தேவியை பரதேவதையை ஆராதித்தால் ரொம்ப விசேஷமான பலன் என்று சொல்லி இருக்கிறது.
நன்றி: அம்மன் தரிசனம்
No comments:
Post a Comment