Tuesday, 18 February 2014

ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹிமா

ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹிமா  (தொடர்ச்சி)

அவரது சிறு வயதில் ஒரு சமயம் அவர் தம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, “நீ பெரியவனானவுடன் என்ன செய்வாய்” என அவர்கள் இவரிடம் கேள்வி எழுப்ப, இவரோ, “நான் கடவுளைத் தரிசிக்க முயற்சி செய்வேன்” என பதிலளித்தார். “நீ ஏன் இந்த பதிலை ஒவ்வொரு முறையும் கூறுகிறாய்?” என அவர்கள் இவரைக் கேட்க, இவரும், “ஏனெனில், அதுதான் பெரும் நன்மை பயக்கும் விஷயம்” எனத் தீர்மானமாகக் கூறுவாராம்! அதே பால்ய வயதிலேயே மற்றொரு சமயம் நண்பன் ஒருவனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஆசார்யாள், “மனிதனானவன் மிருகங்களை வேட்டையாடுவது முறையற்ற செயல்” எனக் குறிப்பிட, உடனே நண்பனும், “இதர சக்தியற்ற விலங்குகளை இந்தக் கொடிய விலங்குகள் வேட்டையாடிக் கொல்கின்றன அல்லவா? அதனால் மனிதன் இவற்றை வேட்டையாடிக் கொல்வது நியாயம்தான்” என பதிலளித்தான். அதற்கு ஆசார்யாள், “மாம்ஸ பக்ஷிணிகளான விலங்குகளுக்கு இரையாக மற்ற பல விலங்குகளை இறைவனே இயற்கையில் சிருஷ்டி செய்திருக்கிறார். இயற்கையின் விதிப்படி நடக்கும் இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்து அவ்விலங்குகளைக் கொல்ல மனிதனுக்கு உரிமை இல்லை” என உறுதிபடக் கூறினாராம்! அந்தச் சிறு வயதிலேயே ஆசார்யாளுக்கு அப்பேர்ப்பட்ட சிந்தனைத் தெளிவு இருந்தது.

(The Crest Jewel of Yogis எனும் புத்தகத்திலிருந்து)

No comments:

Post a Comment