மனிதன் எப்பொழுதும் நல்லவர்களுடன் ஸம்பர்கம் (தொடர்பு) வைத்துக்கொள்ள வேண்டும். கெட்ட மனிதர்கள், அதாவது பிறருக்கு தீங்கு செய்யும் மனிதர்களோடு ஸம்பர்கம் வைத்துக்கொள்ளக் கூடாது. அதுபோன்ற மனிதர்களுடனான ஸஹவாஸம் (உடன் இருப்பது) நல்லவர்களையும் கெடுத்துவிடும். மஹாபாரதக் கதையில் வரும் கர்ணன் இயற்கையில் நல்லவனாக இருந்தாலும், துர்யோதனின் கெட்ட ஸஹவாஸத்தினால் துன்பத்தை அடைந்தான். நல்லவர்களுடைய ஸஹவாஸத்தால் நல்லதாகவும், கெட்டவர்களுடைய ஸஹவாஸத்தால் கெட்டதாகவும் மாறக்கூடியது மனது. ஆகையால், எல்லோரும் எப்பொழுதும் ஸத்ஸங்கத்திலேயே தான் இருக்க வேண்டும். ஸத்ஸங்கத்தினால் மனது பரிசுத்தமாக இருந்து நல்ல நல்ல விஷயங்களையே நினைக்கும். அதனால் நல்ல கார்யங்களே நடக்கும். அப்படி ஸத்ஸங்கத்திலிருப்பவன் எப்பொழுதும் எல்லோருக்கும் நல்லவனாகவே இருப்பான். நல்லவர்களுடனான ஸஹவாஸத்தை ஸத்ஸங்கம் என்றும், நல்லவர்களுடன் ஸஹவாஸம் வைத்திருப்பவனை ஸத்புருஷன் என்றும், நம் சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
தெருவிலுள்ள தண்ணீர்கூட கங்கையின் சேர்க்கையால் பவித்ரமாகிவிடுவது போல ஸத்ஸங்கம் எல்லோரையும் பவித்ரமாக்கிவிடும்.
மஹாஜனஸ்ய ஸம்ஸர்க: கஸ்ய நோன்னதிகாரக:
ரத்யாம்பு ஜாஹ்னவீ ஸங்காத் த்ரிதசைரபிவந்ததே.
எல்லோரும் இதை நன்றாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைப் பவித்ரமாக்கிக் கொள்ளவேண்டும் என்று ஆசீர்வதிக்கிறோம்.

- சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்
No comments:
Post a Comment