Wednesday, 12 March 2014

ஈஸ்வர அனுக்ரஹம் அவசியம் வேண்டும்

ஈஸ்வர அனுக்ரஹம் அவசியம் வேண்டும்

உலகத்துலே ஜனங்கள் பலவிதமாக இருப்பார்கள். அதாவது சிலருக்கு ஐஸ்வர்யத்துக்கு ஒன்றும் குறைவு இருக்காது. ஆனால் வீட்டில் நிம்மதி என்ற ஒன்று இருக்காது. அதேபோல் ஐஸ்வர்யம் நிறைய இருக்கும். ஆனால் வீட்டில் யாரோ ஒருவருக்கு ஏதோ ஓர் அனாரோக்யம் வந்து கொண்டே இருக்கும். இவனுக்கு சரியானால் அவனுக்கு, அவனுக்கு சரியானால் இன்னொருவனுக்கு, அவனுக்கு சரியானால் இன்னொரு குழந்தைக்கு. இந்த மாதிரி இப்படி சிலபேர். சிலபேர் எல்லாம் ரொம்ப ஆரோக்யமாகத்தான் இருப்பார்கள். ஆனால் என்றைக்கும் டாக்டர் முகத்தைப் பார்த்தே இருக்க மாட்டார்கள். ஆனால் வயிறு நிறையச் சாப்பிடுவதற்கே இல்லை. அப்படியும் சிலபேர் இருக்கிறார்கள். சில பேருக்கு அதெல்லாம் இருக்கிறது. ஆனால் படிப்பு என்பது இருக்கவே இருக்காது. ஐஸ்வர்யம் இருக்கிறது, ஆரோக்யம் இருக்கிறது. ஆனால் ஞானம் கிடையாது. ஞானம் வேண்டும் என்று ஆசை ரொம்ப இருக்கிறது சில பேருக்கு. எல்லாம் இருக்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள். இப்படி பலவிதமான ஜனங்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் கூட தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு என்ன செய்யவேண்டும்? ஒருத்தனுக்கு ஐஸ்வர்யம் எல்லாம் இருந்தாலும் மனநிம்மதி, வீட்டு ப்ரச்னைகள் எல்லாம் ஒருத்தன் மாற்றி ஒருத்தனுக்கு உடம்பு சரியில்லாமல் போவது என்கிற கவலை என்று சொன்னோம். இன்னொருத்தனுக்கு உடம்பெல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் ரொம்ப தாரித்ரியம். எல்லாம் இருந்தாலும் கூட படிப்பு இல்லை. இவர்கள் எல்லாருமே என்ன பண்ணணும் என்று கேட்டால் எல்லாருக்கும் இருக்கிற ஒரே ஒரு மார்க்கம். பகவானைச் சரணடைவதுதான்.

உனக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் நீ போய் உன் கஷ்டத்தை சொல்லிக் கொள்ள வேண்டியது, பகவான் சந்நிதியில்தான். கீதையில் பகவான் சொல்லியிருக்கிறார்
“சதுர்விஷா பயந்தேமாம் நராசுகிர் தினோ அர்ஜுனா ஆர்த்தோ
ஜிக்ஞாசு தர்த்தார்த்தி ஞானிசு பர தர்ஷவா”

நாம் எல்லோரும் கூட பகவத் சந்நிதியிலே நம் ப்ரார்த்தனையைச் செலுத்த வேண்டும். அப்போதுதான் நம் ப்ரார்த்தனையை பகவான் ஸ்வீகரித்து நமக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார். அது இல்லாமல் பகவானை மறந்துவிட்டு எல்லாம் நம்முடைய முயற்சியினாலே சரியாகிவிடும். எல்லாவற்றையும் சரி பண்ணலாம் என்று போனால், அது ஒன்றும் சரியாகாது. பகவானுடைய சக்தி எங்கே? நம்முடைய சக்தி எங்கே? நாம் நினைக்கிறோம், எனக்கு நிறையப் பணம் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் நான் பண்ணுகிறேன் என்று, இந்தப் பணம் எத்தனை நாளுக்கு நம்மிடம் இருக்கப் போகிறதோ யாருக்குத் தெரியும்? பணம் இருக்கிற வரையிலும் எல்லோரும் என்னைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். பின்பு

“யாவர் வித்தோ பார்ஜன சஜ்ஜன:
தாவன் நிஜ பரி வாரோ ரத்த:
பஸ்ஜா ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் ப்ருச்சதி கோபின கேஹே”

பணம் இருக்கிற வரையிலும் எல்லோரும் சுற்றிச் சுற்றி வளைய, வளைய, வந்து கொண்டு இருப்பார்கள். “பஸ்ஜா ஜீவதி ஜர்ஜர தேஹே. வார்த்தாம் ப்ருச்சதி கோபின கேஹே. அப்புறம் ஒன்றும் சம்பாதிக்க முடியாத ஒரு நிலைமையிலே இருக்கும் போது வீட்டில் கூட யாரும் பேச மாட்டார்கள். அப்போது பணத்தைப் பார்த்து நாம் கர்வப்படணுமா? இல்லை. அதனால் நம்முடைய சக்தியினாலேயே நம்முடைய சம்பத்தினாலேயே நாம் எல்லாம் நடத்துவோம் என்று நாம் நினைப்பது கொஞ்சமும் சரியில்லை. ஆனால் ஈஸ்வரனுடைய க்ருபை வந்தாகிவிட்டது என்று சொன்னால் அப்போது நடக்காத கார்யங்கள் எதுவும் இல்லை. எவ்வளவோ ஸந்நிவேசங்கள் நாம் ஜீவிதத்தில் பார்க்கிறோம். அநேக கார்யங்கள் நம்முடைய மனுஷ்ய த்ருஷ்டிக்கு இது நடக்கவே முடியாது, சாத்தியமே இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டு இருப்போம். ஆனால் அந்த ஈஸ்வரனுடைய க்ருபை வந்தாச்சு என்றால் க்ஷண மாத்ரத்திலேயே நடந்து விடுகிறது. அப்புறம் நாம் ஆச்சர்யப்படுகிறோம். எப்படி நடந்தது என்று புரியவே இல்லை. ஆனால் கண்டிப்பாக இப்படி ஆகாது என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஓ! ஈஸ்வரன் ரொம்பப் பெரியவன் அப்பா! என்று நாம் அப்போது சொல்கிறோம். எப்போதும் அதே எண்ணம் மனத்தில் இருக்க வேண்டும். எப்போதும் ஈஸ்வரன்தான் பெரியவன். அவனுடைய க்ருபையினாலேதான் நம்முடைய எல்லாக் கார்யங்களும் சரியாக வேண்டும். நாம் ஈஸ்வரனை மிக பக்திஸ்ரத்தைகளோடு ஆராதித்தால் நம்முடைய அபீஷ்டங்கள் நிறைவேறும் என்பதில் சந்தேகமே வேண்டாம். சிலர் ஏதோ பண்ணிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் கார்யம் நடக்கவில்லை என்று சொன்னால் ஈஸ்வரனை ஆட்சேபிப்போம். ஈஸ்வரனை ஆட்சேபிக்க வேண்டியது இல்லை. உங்களுக்கு ஸ்ரத்தை இல்லை. நீங்கள் சரியாக முறைப்படி செய்யவில்லை. ஸ்ரத்தை இல்லாமல் செய்யும் கார்யம் எதுவும் பலிக்காது என்று பகவான் கீதையில் சொல்லி விட்டார். ஸ்ரத்தை இல்லாமல் நீங்கள் என்ன தபஸோ, ஹோமமோ, யாகமோ, பூஜையோ என்ன பண்ணினாலும் அது எதுவும் பலிக்காது. அதனால் ஸ்ரத்தை, பக்தி இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு நீ என்ன செய்தாலும் அது பலிக்கும். அது சபலமாகும். ஆகையால் ஈஸ்வரன் நாம் செய்கிற கார்யத்திற்கு பலத்தைக் கொடுக்கிறான் என்கிற விஷயத்துலே எந்த சம்சயத்துக்கும் அவகாசம் இல்லை. சில சமயங்களில் நாம் விரும்பிய பலன் வரவில்லை என்றாலும் அது நம்முடைய லோபம்.
ஒரு வித்யார்த்தி சரியாகப் படித்து பேப்பர்ல எழுதினான் என்று சொன்னால் கண்டிப்பாக அவன் பர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் ஆவான். அவன் பாஸ் ஆகவில்லை என்று சொன்னால் வாத்யார் மேல் குற்றம் சொல்ல முடியாது. அவன் சரியாகப் படிக்கவில்லை. அவன் சரியாகப் படிக்கவில்லை, சரியாக எழுதவில்லை, பெயில் ஆகி விட்டான் என்றால் அதற்காக வாத்யாரைத் திட்டிக் கொண்டிருந்தால் அது நன்றாக இருக்குமா? அவருடையது என்ன குற்றம்? நீ சரியாக எழுதி இருந்தால் அவர் மார்க் போட்டிருப்பார். நீ எழுதவில்லை. அதே மாதிரி நாம் ஸ்ரத்தா பக்திகளோடு கார்யத்தைச் செய்திருந்தால் அதற்கு அவசியம் நமக்கு ஈஸ்வரன் பலன் கொடுப்பார். நம்முடைய ஸ்ரத்தாலோபத்தினாலே பலன் கிடைக்கவில்லையென்றால் அதற்கு ஈஸ்வரனை நாம் எப்படி ஆட்க்ஷேபம் பண்ணுவது? இதை எப்போதும் நாம் தெரிந்து கொண்டு ஒவ்வொரு கார்யத்தையும் கூட ஈஸ்வர பக்தியோடு ஸ்ரத்தையோடு செய்யவேண்டும். அப்போது நம்முடைய கார்யங்கள் சித்திக்கும். அதோடு நம்முடைய ப்ரயத்னமும் வேண்டும். அப்படியில்லாமல் ஈஸ்வரனுடைய அனுக்ரஹத்தினால் எல்லாம் சித்திக்கும் என்று சொல்லி ஸ்கூலுக்குப் போகும் பையன்கள் புஸ்தகம் பார்க்காமல் பகவானுக்கு ஒரு புஷ்பம் போட்டு விட்டு உட்கார்ந்து விட்டால் வருமா படிப்பு? வராது. நீ நன்றாகப் படிக்க வேண்டும், ஈஸ்வரனையும் ப்ரார்த்தனை பண்ண வேண்டும். அதனால் ஒவ்வொரு கார்யத்திலும் கூட நம்முடைய முயற்சியும் ஈஸ்வரனுடைய க்ருபையும் இரண்டும் சேர்ந்துதான் நம் கார்யங்கள் சபலம் ஆகின்றன. இந்த விஷயத்தை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும். அதன்படி நடந்து கொள்ள வேண்டும். அதனால் நமக்கு எல்லாக் கார்யங்களும் நிறைவேறும். நம்முடைய வாழ்க்கை நல்லபடியாக நடக்கும். எப்பேர்ப்பட்ட ஞானிகள் எப்பேர்ப்பட்ட தபஸ்விகள் கூட பகவத் விஷயம் வரும்போது அபாரமான ஸ்ரத்தா பக்தியோடு இருப்பார்கள்.

“ஆத்மா ராமாஸ்ச முனய: நிர்க்ரந்தா: த்ருயுக்ரமே குர்வந்
த்யைகுதீம் பக்திம் இந்தம் பூரகுமணாஹமி:

என்றார் பாகவதத்திலே. எப்பேர்ப்பட்ட மஹான்கள் ரிஷ்யாதிகள் அவர்களுக்கு எந்தவிதமான ஆசையும் கிடையாது. மனசிலே இது வேண்டும், அது வேண்டும் என்பது இல்லவே இல்லை. ஆனால் பகவத் விஷயம் வந்தால் அவர்களுக்கு ஓர் அளவில்லாத பக்தி. எதற்காக அவர்களுக்கு பகவத் பக்தி. ஒன்றும் இல்லை. அவர்களுக்கு அதில் ஓர் ஆனந்தம். அப்பேர்ப்பட்டவன் பரமாத்மா. அந்தப் பரமாத்மா, விஷயமான பக்தி நமக்கு என்றைக்கும் குறையக் கூடாது. அந்த பக்தியுடன்தான் நம்முடைய ஜீவனத்தின் ஒவ்வொரு க்ஷணங்களும் கழிய வேண்டும். எல்லோருக்கும் இந்த பக்தி ஸ்ரத்தைகள் நிரந்தரமாக இருக்கட்டும் என்றுதான் நாம் சொல்லுகிறோம்.

- ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்

No comments:

Post a Comment