ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்
துக்கங்களை அனுபவிக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் எல்லோருக்கும் வந்து கொண்டு இருக்கும். “அவருக்கு என்ன குறை?” என்று ஒருவரைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருப்போம். தனியாக அவரைக் கூப்பிட்டுக் கேட்டால் தான் அவருக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறது என்று அவர் சொல்லுவார். அதேபோல் பெரிய அதிகாரத்திலே இருக்கிற மனுஷ்யனானால் “அவனுக்கு என்ன ஐயா! பெரிய பதவியிலே இருக்கிறான்” என்று நினைத்துக் கொள்வோம். அவனைக் கூப்பிட்டுக் கேட்டால் “இந்தப் பதவி பெரிய தொல்லையாக இருக்குப்பா” என்று அவன் சொல்வான். இதை வைத்துத்தான் 'இந்த ஸம்ஸாரம் ஒரு ஸாகரம்' என்று சாஸ்த்ரத்தில் சொல்கிறது. 'ஸாகரம்' என்று சொன்னால் ஸமுத்ரம். ஸமுத்ரம் (கடல்) பரம கந்தர்வமாக (அழகாக) இருப்பது போல் மேலுக்குத் தெரிந்தாலும், அதற்கு உள்ளே நிறைய முதலை, பெரிய பெரிய சுழல் இன்னும் என்னவெல்லாமோ இருக்கும். அதேபோல இந்த ஸம்ஸாகர ஸமுத்ரத்திலேயே எப்போதுமே இருந்து கொண்டிருந்தால் நமக்கு இதில் இருந்து விடுதலையே கிடையாதா? என்கிற ப்ரச்னைக்கு ஓர் அழகான ஜவாப் (பெரியோர்கள்) சொல்லியிருக்கிறார்கள் :
(ஸஜ்ஜன பூஜனசீலன லோகம்
அர்ஜய வர்ஜய துர்ஜன சங்கம்
துஸ்சர ஸம்ஸ்ருதி ஸாகரவேகே
மஜ்ஜன காரண வாரண மேதத்)
அர்ஜய வர்ஜய துர்ஜன சங்கம்
துஸ்சர ஸம்ஸ்ருதி ஸாகரவேகே
மஜ்ஜன காரண வாரண மேதத்)
அதாவது அபாரமான, தாங்கமுடியாத இந்த துக்க சமுத்ரத்தைத் தாண்டுவதற்கு ஓர் உபாயம் (வழி) இருக்கிறது. ஸத்புருஷர்களிடம் ஸகவாஸம் செய். அது ஒன்றுதான் உனக்கு உன்னுடைய ஜீவிதத்திலே ஸ்ரேயஸைத் தரக்கூடிய சமாசாரம். இரண்டாவது துர்ஜனங்கள் (துஷ்டர்களுடைய) சகவாசத்தை விட்டுவிடு. அதனால் இரண்டு விஷயம், ஒன்று ஸத்புருஷர்களுடைய சகவாசத்திலே இருக்க வேண்டும், மற்றொன்று துஷ்டர்களுடைய சகவாசத்திலே இருக்கக் கூடாது. அப்போது யார் ஸத்புருஷர்கள், யார் துஷ்டர்கள் என்கிற ப்ரச்னை தானாகவே வரும். என்னவோ நாம் ஒருவனை ஸத்புருஷன் என்று நினைத்துக் கொண்டு அவனிடம் போவோம். 'கடைசியிலே எதற்கப்பா இவன் சகவாசத்துக்கு வந்தோம்?' என்று ஆகிவிடும். அதனால் எப்படி தெரிந்து கொள்வது என்று சொன்னால் ஓர் இடத்திலே சொல்லப்படுகிறது:
(ஏதே ஸத்புருஷா: பரார்த்தகடகா: ஸ்வார்த்தான் பரித்யஜ்யயே)
எவன் தன்னுடைய ஜீவிதத்திலே ஸ்வார்த்தத்தைப் (சுயநலம்) அ (தன்னலம்) பார்க்காமல் இன்னொருத்தனுக்கு உதவி செய்வானோ அவன் ஸத்புருஷன். எவன் தன்னுடைய ஸ்வார்த்தத்துக்கே ப்ராதான்யம் (முக்கியம்) கொடுப்பானோ அவனை ஸத்புருஷன் என்று நாம் நினைத்துக் கொள்ள முடியாது (கூடாது).
ஆசார்யர் சங்கரருடைய ஜீவிதம் முழுவதும் லோக உபகாரத்துக்காகவே இருந்தது. அவர் எவ்வளவு சஞ்சாரம் பண்ணினார்! எவ்வளவு க்ரந்தங்களை எழுதினார்! எவ்வளவு ப்ரசாரம் செய்தார்! இவ்வளவும் லோக உபகாரத்துக்காகத்தான். அவருக்காக ஒன்றுமே இருக்கவில்லை. அவருக்கு என்ன வேண்டும்? அவர் ஒரு ஸன்யாஸி.
அவருக்கு வேண்டியது பிக்ஷாபாத்ரமும் மரத்தடியும் தானே! அதைவிட வேறு எதுவும் தேவையில்லை. ஆனால் அவர் எவராலும் செய்யமுடியாத ஒரு மஹா கார்யத்தைச் சாதித்தவர். அந்தக் காலத்திலே தர்மம் என்று சொன்னாலோ, வேதம் என்று சொன்னாலோ காதைப் பொத்திக் கொண்டு இருந்த காலம். ஜனங்களுக்கு வேதத்தைப் பற்றியும், தர்மத்தைப் பற்றியும், வேதாந்தத்தைப் பற்றியும் அறிவை உண்டாக்கியவர் அவர். அப்பேர்ப்பட்டவர் ஸத்புருஷர். எவனுடைய மனதிலே தயை என்பதே கிடையாதோ, எவனுடைய மனதிலே ஆஸ்திக்யமே கிடையாதோ, எவன் எப்போதும் இன்னொருவனை ஏமாற்றுவதே தன் வேலையாக வைத்துக்கொண்டு இருப்பானோ அவன் துர்ஜனன். அவனுடைய சகவாசம் நமக்குக் கூடாது. ஏன் என்று கேட்டால் நாம் யாருடைய சகவாசத்திலே இருக்கிறோமோ அவர்களுடைய ஸ்வபாவம் தானே தான் நமக்கும் வரும்.
ஒருவன் சாயங்காலம் ஆனால் தினமும் கோவிலுக்குப் போவான். அவனுடன் நாம் சகவாசம்
செய்தோமானால் நமக்கும் அதே ஸ்வபாவம் ஏற்படும். சாயங்காலம் ஆனால் கோவிலுக்குப் போகவேண்டும், போய் ஸ்வாமி தர்சனம் செய்ய வேண்டும் என்று தோன்றும். அதுவே இன்னொருவனுக்கு தினமும் சாயங்காலம் ஆனதும் சினிமாவுக்குப் போகும் அப்யாஸம் (பழக்கம்). நமக்கு இதுவரை சினிமாவுக்குப் போகும் அப்யாஸம் இருந்திருக்காது. அவன் சகவாசம் ஆன பிற்பாடு ஒரு நாள்கூட சினிமாவுக்குப் போகவில்லை என்றால் மனம் கேட்காது. எதனால்? அந்தச் சகவாசம் என்பது அப்பேர்ப்பட்டது.
ஸம்ஸர்கஜா: தோஷ-குணா: பவந்தி
என்கிறது சாஸ்த்ரம்.
என்கிறது சாஸ்த்ரம்.
நல்லது - கெட்டது இரண்டுமே சகவாசத்தினாலே ஏற்படும். அப்படி இருக்கும் போது, இந்த துக்க ஸாகரத்திலேயே மூழ்கிக் கொண்டிருக்கும் நமக்கு ஸத்புருஷர்களுடைய சகவாசம் ஒன்றுதான் மார்க்கதர்சகமானது. ஏன் என்றால் அவர்களிடம் எப்போதும் நல்ல விஷயங்கள்தான் வந்து கொண்டிருக்கும்.
முதலிலேயே நாம், எவனுக்கு எப்போதும் பூததயை இருக்கிறதோ, எவனுக்கு ஆஸ்திக்யம் இருக்கிறதோ அவன் ஸத்புருஷன் என்று சொன்னோம். எப்போது பார்த்தாலும் அவனிடம் தெய்வசிந்தனை, தர்மசிந்தனை, கர்மசிந்தனை தான் இருக்கும். அவனுக்கு வீண் பேச்சிலே மனம் போகாது. நாம் எவ்வளவோ வீண் பேச்சுகள் பேசி நம்முடைய அமூல்யமான சமயத்தை வீணாக்கிக் கொண்டிருப்போம். அதே ஒரு ஸத்புருஷனிடம் பேசப்போனால் அவன் ஒன்று ஸ்வாமி பற்றிப் பேசுவான், இல்லையெனில் தர்மத்தைப் பற்றிப் பேசுவான். அதனால்தான் அவர்கள் சகவாசம் வேண்டும் என்று சொல்கிறோம். 'ஸத்புருஷ சகவாசம் செய்வேன், நான் துஷ்ட சகவாசம் செய்ய மாட்டேன் என்கிற ஒரு சூத்ரத்தை கடைப்பிடிப்போமானால் நிச்சயமாக நம்முடைய ஜீவிதத்திலே ஓர் ஆனந்தத்தை, ஒரு சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.
முக்கியமாக நமக்கு சாஸ்த்ரத்திலே ஸ்ரத்தை வேண்டும். கௌரவம் வேண்டும். அநேகம் பேர் “என்ன சாஸ்த்ரம்-கீஸ்த்ரம் எல்லாம் பழைய காலத்துப் பேச்சு” என்று சொல்வதுண்டு. அந்த மாதிரி வார்த்தைகள் நம் வாயால் வரக்கூடாது. எத்தனை வருஷங்கள் ஆனாலும் சாஸ்த்ரம், சாஸ்த்ரம்தான். அதை யாரும் மீற முடியாது, மீறக் கூடாது. கோவிலுக்குப் போக வேண்டும், பகவானுடைய அருள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நேற்றைக்கு இன்றைக்கு நாம் சொன்ன விஷயமா? ஆயிரக்கணக்கான வருஷங்களிலிருந்து நாம் தீர்மானமாகத் தெரிந்து கொண்ட விஷயம். இன்றைக்கு எவனாவது போய் அதெல்லாம் தப்பு என்று சொன்னால் அவனை என்ன சொல்ல வேண்டும்? கொஞ்சமும் புத்தியில்லை, விவேகமே இல்லாதவன் என்றுதானே சொல்ல வேண்டும்? அதனாலே ஈஸ்வர விஸ்வாசம் ரொம்பவும் நமக்கு அவஸ்யமானது. ஜீவிதத்திலே எப்பேர்ப்பட்ட பரிஸ்திதி (சூழ்நிலை) இருந்து வந்தாலும் ஈஸ்வரனை மட்டும் மறக்கக்கூடாது. அந்த ஈஸ்வரனை பரம ஸ்ரத்தையோடு, பரம விஸ்வாசத்தோடு, பரம பக்தியோடு சேவிக்க வேண்டும். அந்த பகவானுடைய கிருபையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஸத்புருஷர்கள் ஸகவாசத்தைப் பற்றி பகவத்பாத சங்கரர் அநேக இடங்களில் சொல்லியிருக்கிறார் - ஷிவுஸீsருவீtக்ஷீமீளீணீ தூஸ்வீt தூஸ்ணீ[ஸிஸ்tக்ஷீ[மீ ஸீணீணிளீணீ (ஸஜ்ஜ்ன ஸங்கதிரேகா பவதி பவார்ணவ தரணே நொகா) என்று ஓர் இடத்திலே சொன்னார். இன்னோர் இடத்தில் : sரு> sஜிsu வீஸ்ஜ்மிஹ்tணீனீ! தூரீஸ்tணீமீ தூவீடு> ட்திணீ=பீமிஹ்tணீனீ! (ஸங்க: ஸத்ஸு விதீயதாம் பகவதோ பக்தி: த்ருடா தீயதாம்) என்று சொன்னார். இவை எல்லாம் ஸத்புருஷ ஸகவாசத்திலே இரு என்று சொல்வதற்கு அவர் சொன்ன வாக்கியங்கள். இதை எப்போதும் நாம் மனதிலே வைத்துக் கொண்டு ஜீவிதத்தை ஸார்த்தகமாக்கிக் கொள்ள வேண்டும், தன்யமாக்கிக் கொள்ள வேண்டும். பகவான் ஒவ்வொருவனுக்கும் இந்த மாதிரி ஒரு சம்ஸ்காரத்தை அருள் செய்யட்டும் என்று பகவானை நான் ப்ரார்த்திக்கிறேன்.
No comments:
Post a Comment